இளநரைக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா? ‘ஆம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

அடிப்படையில், கரோனரி தமனிகள் சேதமடைவதால் உறுப்புக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் குறைவாக வழங்கப்படும்போது இதய நோய் ஏற்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2020, 03:48 PM IST
  • ஒரு நபரின் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன.
  • இளநரை, இதய நோயுடன் தொடர்புடைய ஒரு ஆச்சரியமான ஆபத்து காரணியாகும்.
  • வழுக்கை மற்றும் இளநரைக்கும் இளைஞர்களில் இதய நோய்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது.
இளநரைக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா? ‘ஆம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!  title=

புதுடெல்லி: இதய நோய்கள், கரோனரி இதய நோய் (CHD) என்றும் அழைக்கப்படுகின்றன. இது சமீப காலங்களில் பெரியவர்களிடையே மரணத்திற்கு முக்கிய காரணமாக இருகின்றது. அடிப்படையில், கரோனரி தமனிகள் சேதமடைவதால் உறுப்புக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் குறைவாக வழங்கப்படும்போது இதய நோய் ஏற்படுகிறது. ஒரு நபரின் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன. இருப்பினும், இதய நோயுடன் தொடர்புடைய ஒரு ஆச்சரியமான ஆபத்து காரணியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுதான் இளநரை (Premature Greying).  

40 வயதிற்குட்பட்ட ஆண்களில் உடல் பருமனைக் காட்டிலும் வழுக்கை மற்றும் இளநரை, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய ஆய்வாளர்கள் வழுக்கை மற்றும் இளநரை ஆகியவை இளைஞர்களில் இதய நோய்களுக்கு அதிக தொடர்பு கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதய நோய் மற்றும் நரை முடி: ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

ஐரோப்பிய இருதயவியல் சங்கம் நடத்திய ஆராய்ச்சிக்காக, 42 முதல் 64 வயது வரையிலான 545 ஆண்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். நரை முடியின் அளவை அடிப்படையாகக் கொண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டன.  கருப்பு முடி, வெள்ளை மற்றும் சாம்பல் என குழுக்கள் பிரிக்கப்பட்டன.

இதய பாதிப்பு (Heart Problems) இருப்பதாகக் கண்டறியப்பட்ட சுமார் 80 சதவீதம் ஆண்களுக்கு அதிக அளவு நரை முடி இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.  தலை முடி நரைத்தாலே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என்றாலும், இளநரை, உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதற்கான ஆறிகுறியாக கண்டிப்பாக இருக்கலாம். இளநரைக்கான பொதுவான காரணங்களில், மன அழுத்தம், மரபியல், தைராய்டு கோளாறு, ஆட்டோ இம்யூன் நோய், வைட்டமின் பி 12 குறைபாடு, புகை பிடித்தல் ஆகியவை அடங்கும்.

ALSO READ: என்ன கொரோனாவை குணப்படுத்த அன்னாசி பழம் போதுமா?... ஆய்வில் தகவல்!!

உங்கள் இதயத்தில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்று சொல்வது எப்போதும் எளிதல்ல என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அனைத்து இதய நோய்களும் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளுடன் வருவதில்லை. இதய நோய் உள்ள அனைவருக்கும் மார்பு வலி ஏற்படுவதில்லை. இதய நோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை அறிந்திருப்பது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத இதய நோய்க்கான சில அறிகுறிகள் இவை:

  • மார்பு பகுதியில் அசௌகரியம் - இதய நோயின் பொதுவான அறிகுறி இதுவாகும்.
  • மூச்சு திணறல்
  • ஒழுங்கற்ற இதய துடிப்பு
  • குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி
  • மயக்கம் அல்லது லேசான தலைவலி
  • சோர்வு
  • அதிகப்படியான வியர்வை
  • குறட்டை
  • தொண்டை அல்லது தாடை வலி
  • நீங்கா இருமல்
  • உடலின் இடது பக்கத்தில் வலி
  • கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்
  • முடி கொட்டுதல்
  • இளநரை

சில நேரங்களில், இதய நோய் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம். ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும் வரை அது கண்டறியப்படாமலும் இருக்கலாம். எனவே, உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், இந்த அறிகுறிகளைக் கவனித்து, விரைவில் மருத்துவ உதவியைப் பெறுவது முக்கியம். அதிர்ஷ்டவசமாக, பல வகையான இதய நோய்களைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மூலம் அவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும்.

ALSO READ: ஆரோக்கியமான உணவு என்று குழப்பமா? சரியான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...

Trending News