Shocking: இந்த வாரம் COVID Vaccine, அடுத்த வாரம் Corona Positive: US-ல் பரபரப்பு

COVID எதிர்ப்பு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2020, 05:28 PM IST
  • COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட எட்டு நாட்களுக்குப் பிறகு தொற்றால் பாதிப்பு.
  • கலிஃபோர்ணியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு.
  • அந்த நபர் இரண்டு மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிகிறார்.
Shocking: இந்த வாரம் COVID Vaccine, அடுத்த வாரம் Corona Positive: US-ல் பரபரப்பு title=

கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு செவிலியருக்கு, ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோவிட் எதிர்ப்பு மருந்தைப் பெற்ற எட்டு நாட்களுக்குப் பிறகு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேத்யூ டபிள்யூ என அடையாளம் காணப்பட்ட ஈ.ஆர் செவிலியர் டிசம்பர் 18 அன்று தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'என் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இன்னும் சிலரும் என்னுடன் காத்திருந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.” என்று மேத்யூ தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், கிறிஸ்துமசுக்கு முதல் நாள், சான் டியாகோவில் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மேத்யுவுக்கு, ஒரு COVID-19 யூனிட்டில் பணிபுரிந்த பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஊடக செய்தியின் படி, மேத்யு டிசம்பர் 26 ஆம் தேதி ஒரு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் (Coronavirus) பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னணி சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மேத்யூவுக்கு நடந்தது ஆச்சரியத்தை அளிக்கும் ஒன்றாக இருந்தாலும், இது எதிர்பாராதது அல்ல. “நீங்கள் எண்களின் அடிப்படையில் பார்த்தால், தொற்றுக்கு மத்தியில் இருப்பவர்களுக்கு இது எதிர்பார்க்கப்பட்டதுதான்” என்று சான் டியாகோவின் குடும்ப சுகாதார மையங்களின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் கிறிஸ்டியன் ராமர்ஸ் மேற்கோளிட்டுள்ளார்.

ALSO READ: புதிய COVID பழைய வைரஸுக்கு ஆபத்தானது; குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்!

COVID எதிர்ப்பு தடுப்பூசி (Vaccine) பெறுவதற்கு முன்பு மேத்யு நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் அவர் அதை அறிந்திருக்க மாட்டார் என்றும் ராமர்ஸ் மேலும் கூறினார். கொரோனா தடுப்பூசி பணித்திட்டம் மெதுவாக செயல்படுவதால், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் திட்டம் பெரும் தடையைக் கண்டுள்ளது. இதன் விளைவாக, இந்த பணித்திட்டத்தை தற்போதைய விகிதத்தில் முடிக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகலாம் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் அமெரிக்கர்கள் COVID-19 தடுப்பூசியைப் (COVID Vaccine) பெறுவார்கள் என்றும் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் ஜூன் மாத இறுதியில் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றும் 'ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்' பணித்திட்ட உறுப்பினர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

எனினும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், தடுப்பூசி முயற்சிகள் தேவையை விட மெதுவான வேகத்தில் நகர்கின்றன என்பதைக் காட்டுகிறன. இந்த மாத தொடக்கத்தில் அனுப்பப்பட்ட 11.4 மில்லியன் டோஸ்களில் 2.1 மில்லியன் அமெரிக்கர்கள் மட்டுமே முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி அளிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவத்திற்கு தடுப்பூசி உற்பத்தியாளர் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News