Cold Water Side Effects: குளிர்ந்த நீரை குடிப்பதால் தாகத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்க, கோடையில் நீரேற்றமாக இருக்க, பெருமபாலானோர் குளிர்ச்சியான திரவ பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். அதில் தண்ணீருடன், மக்கள் லஸ்ஸி, ஜூஸ் மற்றும் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பானங்களும் அடங்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க குறைந்தபட்சம் 8 -10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இருப்பினும், சரியான வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வெயில் காலத்தில் தாகத்தைத் தணிக்க குளிர்ந்த நீர் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிப்பது உண்மை தான். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய தீங்கு விளைவிக்கும். வெயிலில் சென்று விட்டு வரும் போது திடீரென குளிர்ந்த நீரை அதாவது, குளிசாதனத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜில் தண்ணீரை உட்கொள்வது உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். வெயிலில் இருந்து வெளியே வந்த பின், உடற்பயிற்சி செய்த பின் அல்லது சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்துவது, உடலில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஃபிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. உடல் எடை அதிகரிக்கும்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குளிர்ந்த நீரை உட்கொள்ளக் கூடாது. குளிர்ச்சியான நீரால் உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைப்பது கடினமாகிறது. ஃப்ரிட்ஜ் தண்ணீர் உடல் கொழுப்பை கடினப்படுத்துகிறது. இது கொழுப்பைக் குறைப்பதை கடினமாக்குகிறது. எனவே நீங்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் உடல் பருமன் (Obesity) குறையாது.
2. மலச்சிக்கல்
உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் குளிர்ந்த நீரை அருந்தவே கூடாது. குளிர்ந்த நீரைக் குடிப்பது உங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை மோசமாக்கும். உண்மையில், குளிர்ந்த நீர் வயிற்றில் சென்று மலத்தை கடினமாக்குகிறது. மேலும் செரிமானம் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, உங்களுக்கு ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், குளிர்ந்த நீரை கூட தொடாதீர்கள், உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்றாலும் கூட, மிகவும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம் ஏனென்றல், இது செரிமானத்தை பாதிக்கும்.
மேலும் படிக்க | உடல் பருமனால் பிரச்சனையா? வேகமா குறைக்கலாம்.. வெள்ளை மிளகை இப்படி சப்பிடுங்க
3. செரிமான பிரச்சனைகள்
குளிர்ந்த நீரைக் குடிப்பதன் மூலம், செரிமான செயல்முறை சரியாக நடைபெறாது. ஏனெனில் குளிர் வெப்பநிலை வயிற்றை இறுக்குகிறது, இது உணவை ஜீரணிக்க கடினமாகிறது. மருத்துவ ரீதியாக, எப்போதும் குளிர்ந்த நீரை குடிப்பவர் அடிக்கடி வயிற்று பிரச்ச்சனை, வயிற்றில் வலி ஆகிய பிரச்சனைகளுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ந்த நீர் உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கிறது என்பது பலருக்கு தெரியாது. ஏனெனில் இது கழுத்தின் பின்புறத்தில் உள்ள நரம்புகளைப் பாதித்து, இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
4. தொண்டையில் தொற்று பாதிப்பு
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கும் போது, அது சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக தொண்டை புண், சளி, இருமல், தொண்டையில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
5. தலைவலி பிரச்சனை
குளிர்ந்த நீர் தலையில் இருக்கும் மண்டை நரம்புகளையும் பாதிக்கிறது, இதனால் கடுமையான தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும், கோடை காலத்தில் கடுமையான தலைவலி ஏற்படும் போது, அதிகமான சூரிய ஒளி காரணமாக வலி இருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் வலிக்கான உண்மையான காரணம் வலுவான சூரிய ஒளியில் இருந்து வரும் போது உடனடியாக தண்ணீரைக் குடிப்பதாகும். எனவே, இந்த சீசனில் தாகம் எடுக்கும் போதெல்லாம், சாதாரண தண்ணீரை மட்டுமே குடிக்கவும். இது உங்கள் தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து வகையான நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
(பொறுப்பு துறப்பு: ஆலோசனை உள்ளிட்ட இந்த கட்டுரை பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவக் கருத்துக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE NEWS பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | உடலின் இந்த பகுதியில் நெய் தடவினால் கண்கள் மற்றும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ