Weight Loss Tips: தொப்பை கொழுப்பை எரிக்கும் ‘சில’ எளிய பயிற்சிகள்!

தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் நீங்கள் எரிக்கக்கூடிய கலோரிகளின் அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் கலோரி உட்கொள்ளல் மற்றும் அதிக கலோரிகளை எரிக்க வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2023, 11:58 AM IST
  • ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு, வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • தொப்பை கொழுப்பை கரைக்க எளிய ஆனால் பயனுள்ள பயிற்சிகள்.
  • தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்க வேண்டும்.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை எரிக்கும் ‘சில’ எளிய பயிற்சிகள்! title=

தொப்பை கொழுப்பு என்பது உங்கள் இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு. அதிகப்படியான தொப்பை கொழுப்பு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உயர் இரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல இதய நோய்கள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, தொப்பை கொழுப்பை கரைக்க வேண்டியது அவசியம். கூடுதலாக, தொப்பை என்பது தோற்றத்தை குலைக்கும். தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் நீங்கள் எந்த அளவிற்உ கலோரிகளை எரிக்க முடியுமோ, அந்த அளவு கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவு மற்றும் அதிக கலோரிகளை எரிக்க வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு, வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க பயனுள்ளதாக இருக்கும்.

தொப்பை கொழுப்பை கரைக்க எளிய ஆனால் பயனுள்ள பயிற்சிகள்:

1. க்ரஞ்சஸ்

உடலை ஆரோக்கியமாகவும் சிக்கென்றும் வைத்துக் கொள்ள யாருக்குத் தான் ஆசை இருக்காது.  வயிற்று கொழுப்பை எரிக்க மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி கிரன்ஞ்சஸ் ஆகும். கொழுப்பை எரிக்கும் பயிற்சிகளைப் பற்றி பேசும் போது கிரன்ஞ்சஸ் முதலிடம் வகிக்கிறது. இது தொப்பை கொழுப்பை மிக வேகமாக கரைக்கும்.  வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி, கட்டான வயிற்றுப் பகுதி அமைய பெரும் பங்கு வகிக்கிறது. க்ரஞ்சஸ் வயிற்றுப் பகுதி அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சதையைக் குறைக்க முறையான ஒரு உடற்பயிற்சியாகும். மிகவும் சக்திவாய்ந்த பயிற்சியும் கூட. உங்கள் முழங்கால்களை மடித்த நிலையில், உங்கள் கால்களை தரையில் படும்படி படுத்துக் கொண்டு தொடங்கலாம். உங்கள் கைகளை உயர்த்தி, அவற்றை தலைக்கு பின்னால் வைக்கவும். க்ரஞ்சஸ் செய்யும் பொழுது உங்கள் தோள்பட்டையை 2 முதல் 3 இஞ்ச், தரைமட்டத்திலிருந்து உயர்த்தினால் போதும். இதற்கு மேலாக உயர்த்தும் பொழுது சரியான பலன் கிடைப்பது குறைந்து விடும்.

2. நடைபயிற்சி

மிகவும் எளிமையான கார்டியோ உடற்பயிற்சியான நடை பயிற்சி தொப்பை கொழுப்பைக் குறைத்து ஃபிட்டாக இருக்க உதவுகிறது. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சீரான உணவுடன் நடப்பது உடல பருமனை குறைப்பதில் அதிசயங்களைச் செய்யலாம். பிரெஷ்ஷான காற்றில் முப்பது நிமிடங்கள் வேகமாக நடப்பது வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கூடுதலாக, இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஓடுவது கூட கொழுப்பை எரிப்பதற்கு நன்மை பயக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பயிற்சிக்கு உங்களுக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. இது உடலின் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

3. ஜூம்பா

உற்சாகமாக செய்யும் உடற்பயிற்சிகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். ஜூம்பா என்பது ஒரு வொர்க்அவுட் பார்ட்டி போன்றது. ஜூம்பா உடற்பயிற்சிகள் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி ஆகும். பலவிதமான, உடல் அசைவுகளை கொண்ட நடனம் போன்ற சீரான அசைவுகள் கொண்ட உடற் பயிற்சி மனதிற்உம் உற்சாகத்தை கொடுக்கும். இது மேம்பட்ட இருதய ஆரோக்கியத்திற்கும், கொழுப்பைக் குறைப்பதற்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், தொப்பை கொழுப்பை விரைவாகக் கரைப்பதற்கும் உதவுகிறது. மற்ற உடற்பயிற்சிகளைப் விட இதிலுள்ள உற்சாகமான விஷயம் என்னவென்றால்,  மற்ற பயிற்சிகளை போன்று ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்ய வைத்து உங்களை சலிப்படையச் செய்யாது. உற்சாகத்தை உண்டு பண்ணும் அதே நேரம் உங்கள் கலோரிகளை எரிப்பதில் கவனம் செலுத்துகிறது. எனவே, கொஞ்சம் இசையை ஓட வைத்து, இப்போதே ஜூம்பா வொர்க்அவுட்டை செய்யத் தொடங்குங்கள்!

4. செங்குத்து கால் பயிற்சி

கால்களை உயர்த்தி செய்யும் பயிற்சி உங்கள் வயிறு மற்றும் தொப்பை பகுதிகளுக்கு சிறந்தது. இது வலுவான வயிற்று தசைகளை உருவாக்கவும், வலிமையை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும், உங்கள் உடலை டோன் செய்யவும் உதவுகிறது. கால்களை உயர்த்துவது மலக்குடல் வயிற்று தசையை முற்றிலும் தனிமைப்படுத்தி உங்கள் வயிற்றை டன் செய்ய உதவுகிறது. உங்கள் உள்ளங்கைகளை உங்கள் இடுப்புக்கு கீழே வைத்து உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மெதுவாக உங்கள் கால்களை 90 டிகிரி கோணத்தில் உயர்த்தவும். உங்கள் முழங்கால்களை நேராகவும், கால்களை உயர்த்தி பிடித்தும் வைக்கவும். ஒரு கணம் மூச்சை இடைநிறுத்தி, மூச்சை வெளியேற்றும் போது உங்கள் கால்களை கீழே இறக்கவும். இந்த சூப்பரான பயனுள்ள பயிற்சியை விரைந்து முயற்சிக்கவும்! ஏனென்றால் இதற்கு கை மேல் பலன் உண்டு.

5. சைக்கிள் ஓட்டுதல்

வயிற்று கொழுப்பை எரிக்க சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த பயற்சியாகும். சைக்கிள் ஓட்டுதல் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரிக்கும் திறனையும் கொண்டுள்ளது. சைக்கிள் ஓட்டுதல் உங்கள் தொடைகள் மற்றும் இடுப்பில் எடை குறைக்க உதவுகிறது. எனவே அருகிலுள்ள இடங்களுக்கு சைக்கிளில் பயணிக்கத் தொடங்குங்கள். இந்த உடற்பயிற்சி தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6. ஏரோபிக்ஸ்

நீங்கள் ஜிம்மிற்குச் செல்லாமல் தொப்பையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் அதிக தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம். இந்த உடற்பயிற்சிகள் பயனுள்ளவை, எளிமையானவை, உற்சாகம் ஊட்டுபவை  மற்றும் அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கு சிறந்தவை.

பொறுப்பு துறப்பு: ஆலோசனைகள் உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE News பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News