Skin Care Tips: மென்மையான சருமம் வேணுமா, இத டிரை பண்ணுங்க

Tips to get Smooth Skin: உங்கள் முக சருமத்தை மிருதுவாக மாற்ற விரும்பினால், இந்த 2 விஷயங்களை தினமும் செய்தாள் போதும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 03:08 PM IST
Skin Care Tips: மென்மையான சருமம் வேணுமா, இத டிரை பண்ணுங்க title=

Skin Care Tips: 'மிருதுவாக' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ஸ்மூத் என்று அழைக்கப்படுகிறது, மேலும் மிருதுவான சருமத்தைப் பெற, மக்கள் பல்வேறு வகையான விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 எளிய விஷயங்களைக் கொண்டு, 1 வாரத்தில் உங்கள் முகச் சருமத்தை மிருதுவாக மாற்றலாம். இந்த 2 விஷயங்களை தினமும் செய்து வந்தால், 1 வாரத்தில் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். வாருங்கள், முகத்தை மிருதுவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

குளிர்காலத்தில் (Winter Tips)  காற்று மற்றும் குளிர் காரணமாக நமது சரும தோல் (Dry Skin) வறண்டு, அதன் மிருதுவை இழக்கிறது. ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள 2 எளிய வழிமுறைகள் முகத்தை மீண்டும் மிருதுவாகக் (Skin Care Tips) மாற்றும். 

ALSO READ | செலவில்லாமல் ஒரு ‘Gold Facial’; பாதாம் எண்ணெய் செய்யும் அற்புதங்கள்..!!

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்: குளிர்காலத்தில் மிருதுவான சருமத்தைப் பெற தண்ணீர் குடிப்பதே சிறந்த வழியாகும். ஏனெனில், தண்ணீர் உடலிலும் சருமத்திலும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சரும செல்கள் சிறப்பாக செயல்பட்டு நச்சுகளை வெளியேற்றும். தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் முகம் மிருதுவாக இருக்கும்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினாலும் பலன் கிடைப்பதில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர். தவறான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். உங்கள் சருமத்திற்கு ஏற்ப சரியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமத்தைத் தவிர்க்க, என்சைம்கள், பெப்டைடுகள், செராமைடுகள், ஹைலூரோனிக் அமிலம், நியாசினமைடு போன்றவற்றைக் கொண்ட மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுக்கவும்.

Honey Face Pack: முகத்தை மென்மையாக்க, மேலே உள்ள குறிப்புகள் தவிர, Honey Face Pack ஐ வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். இதற்கு, 1 தேக்கரண்டி சுத்தமான தேன் மற்றும் 2 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் 15-20 நிமிடங்கள் தடவி விடவும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து முகத்தை சுத்தம் செய்யவும். இதன் காரணமாக, முகத்தின் துளைகள் திறப்பதோடு, அதிகப்படியான எண்ணெய் வெளியேறும்.

ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News