உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? ரொட்டி, கோதுமை பிரெட் சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? கவலை வேண்டாம். தென்னிந்திய உணவு பட்டியலில் உடல் எடையை குறைப்பதற்காக பல உணவுகளும் அதன் ரெசிப்பிக்களும் குவிந்து கிடக்கின்றன. இது, உங்களது உடல் வலிமையையும் அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் உதவும். இவை சுவை மிக்க உணவாக இருப்பது மட்டுமன்றி, புரதச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய டயட் உணவுகள் என்னென்ன? அவற்றை எப்படி செய்வது? இங்கே முழுமையாக பார்க்கலாம்.
ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை:
ஐதராபாத்தின் மிகவும் பிரபலமான உணவு, பெசரட்டு தோசை. இதை, பச்சை பயிற்றினை ஊற வைத்து செய்வர். பச்சை பயிறு உடலில் சர்க்கரை அளவை சமன் செய்து, தசைகளுக்கு வலு கொடுக்கும். டயட் இருக்க விரும்புவோர் பெசரட்டு தோசையை தங்களது காலை உணவு டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதை செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
>1 கப் ஊறவைத்த பச்சை பயிறு
>1 பச்சை மிளகாய்
>சிறிய அளவு இஞ்சி
>கொஞ்சமாக உப்பு
>வெட்டிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி
>சிறிதளவு எண்ணெய்
மேலும் படிக்க | வெந்தய தண்ணீருக்குள் இருக்கும் பொக்கிஷம் - குடிச்சு பாருங்க தெரியும்!
செய்முறை:
>ஊறவைத்த பச்சை பயிற்றினை தண்ணீர் ஈர்த்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
>தோசைக்கல் காய்ந்த பிறகு தோசை ஊற்ற வேண்டும்.
>வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையினை தோசை மேலே டாப்பிங்க்ஸாக தூவ வேண்டும்,
>தேவை பட்டால் எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். அப்படி ஊற்றினால்தோசை முறுவலாக வரும். இதனுடன் புதினா சட்னி, தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி ஆகியவற்றை வைத்து சாப்பிடலாம்.
தினை உப்புமா:
உடல் வலிமை பெற உதவும் உணவு பொருட்களில் ஒன்று, தினை. இதில், புரத சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. இது, இதயத்தையும் வலுப்படுத்தும். உடல் எடையை குறைக்க நினைப்போர் கண்டிப்பாக இந்த உணவை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வர். இதில் சுவையான உப்புமா செய்து உடலை வலுபெறவும் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். தினை உப்புமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
>ஒரு கப் தினை
>ஒரு சிறிய வெங்காயம், நறுக்கியது
>கேரட், பீன்ஸ், கார்ன் போன்ற காய்கறிகளை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
>1 டீஸ்பூன் கடுகு
>ஒரு டீஸ்பூன் உளுந்து
>கரிவேப்பிலை, கொத்தமல்லி
>2 பச்சை மிளகாய், வெட்டியது
>2 கப் தண்ணீர்
>உப்பு, தேவையான அளவு
>தேவையான அளவு, எண்ணெய்
உப்புமா செய்வது எப்படி..?
>தினை அரிசியை எடுத்து தண்ணீரில் கழுவ வேண்டும்,
>ஒரு கடாயை எடுத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
>அதனுடன் உளுந்து, கரிவேப்பிலை-கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
>வெட்டி வைத்த வெங்காயத்தை மேற்கூறியவற்றுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
>உப்பு சேர்த்து, எடுத்து வைத்த தினை அரிசியை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
>இதை ஒரு தட்டு அல்லது மூடி போட்டு மூடி வேக விடவும்.
>சில நிமிடங்களில் தண்னீர் காய்ந்த பிறகு உப்புமா தயாராகி விடும். இதை சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்.
பாசிப்பருப்பு சில்லா:
பாசிப்பருப்பு நம் உடலில் உள்ள உடல் எடை குறைப்பு ஹார்மோன்களை தூண்டிவிட உதவுகிறது. கொஞ்சமாக சாப்பிட்டாலே, அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை அளிக்கும் உணவுகளுள் இதுவும் ஒன்று. இதனாலேயே பலர் இதனை தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து கொண்டுள்ளனர். இதில், பாசிப்பருப்பு சில்லா செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
>ஊற வைத்த பாசிப்பருப்பு ஒரு கப்
>ஒரு சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
>பொடியாக நறுக்கிய சிறிய தக்காளி
>ஒரு பச்சை மிளகாய், நறுக்கியது
>கை நிறைய, நறுக்கிய கொத்தமல்லி
>தேவையான அளவு உப்பு
>அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
>தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
>ஊறவைத்த பாசிப்பருப்பை எடுத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
>வெட்டிவைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் அந்த மாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
>இவற்றுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
>தோசை கல்லில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, தோசை போல அந்த மாவை ஊற்ற வேண்டும்.
>இது பொன்முறுவலாக வந்த பிறகு சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | தினமும் நெய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? - 5 நன்மைகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ