புளி உணவுகள் மற்றும் பானங்களுக்கு புளிப்பான சுவையை சேர்க்க பயன்படுகிறது. குழந்தை பருவத்தில் கிட்டத்தட்ட அனைவரும் புளியம் பழத்தை சாப்பிடும் இந்த சுவையான சுவையை அனுபவித்திருப்போம். ஆனால் எளிமையான புளி பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்த சூப்பர்ஃபுட் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. அவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும்.
புளியின் ஆரோக்கிய நன்மைகள்:
1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளி
பொட்டாசியம் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். புளி பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும், இது ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவும். மேலும், இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிஃபீனால்களும் உள்ளன, இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
2. மூட்டுவலியை போக்கும்
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக மூட்டுவலி பிரச்னைகள் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கிறது. மோசமான உணவுப் பழக்கங்களால் மூட்டு வலி பிரச்சனையும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் வருகிறது. இந்த மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பல பேருக்கு தெரிவதில்லை. புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.
மேலும் படிக்க | உடல் பருமன் முதல் ரத்த கொதிப்பு வரை.... நோய்களை நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ்!
3. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
புளி செரிமான அமைப்பினை சீராக்கி ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஒரு டானிக். உடலிலும் குடலும் உள்ள நச்சுக்களை நீக்கும் நீக்கியாக செயல்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது குடல் மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக்கும்.
4. பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன
புளியில் பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்த்து புளி. இதில் இருக்கும் பிரத்யேகமான ஒரு கலவை பூஞ்சைகளை அழிக்கும் திறனை கொண்டுள்ளது.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் புளி
உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் பல பண்புகளை புளி கொண்டுள்ளது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.
சாம்பார் முதல் பல்வேறு தென்னிந்திய உணவுகளை தயாரிப்பதில் புளி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது சட்னி மற்றும் கறி வகைகள் சமைக்கும் போதும் சேர்க்கப்படுகிறது. பலர் புளி தண்ணீரையும் உட்கொள்கின்றனர். அளவோடு சாப்பிட்டு புளியின் இந்த ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கவும் ஆனால் அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முட்டையை பச்சையாக குடிக்கலாமா? ஆஃப் பாயில் முட்டை ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ