முதல் கட்ட தடுப்பூசி செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கும்: பிரதமர் மோடி

முதல் கட்டத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்திய, பிரதமர் மோடி சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2021, 07:39 PM IST
  • அடுத்த சில மாதங்களில் 30 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
  • முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்ட பணியில் சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்
  • மூன்று கோடி சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
முதல் கட்ட தடுப்பூசி செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கும்: பிரதமர் மோடி title=

புதுடெல்லி: ஜனவரி 16 முதல் தொடங்கவுள்ள பிரமாண்டமான வகையில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி  மாநிலங்களின் முதல்வர்களுடன் உரையாடினார், முதல் கட்டத்தில் 3 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதிப்படுத்தும் முன், சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 16 முதல் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் என்பதை பிரதமர் மோடி (PM Narendra Modi) உறுதிப்படுத்தினார்.

ALSO READ | இந்தியாவில் Covishield விலை ₹200 ஆக இருக்கும் என தகவல்

கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடும் இயக்கம் குறித்து பேசிய பிரதமர், சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கள தொழிலாளர்கள் ஆகியோரை தவிர பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்றார்.

முதல் கட்ட தடுப்பூசியில் சுமார் மூன்று கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் கள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாவது கட்டத்தில், பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ள  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

அடுத்த சில மாதங்களில் 30 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

​​அரசியல்வாதிகள் வரிசையில் அவர்களின் முறை வரும்போது மட்டுமே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். வரிசையில் முந்தி செல்ல நினைக்கக் கூடாது என பிரதமர் வலியுறுத்தினார்.

முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை, மத்திய அரசே ஏற்கும் எனவும் பிரதமர் கூறினார்.

ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News