Immunity Booster Foods: கொரோனாவில் இருந்து உங்களை காக்கும் Immunity உணவுகள்

Immunity Booster Foods : கோவிட்-19 நோயைத் தவிர்க்க, நீங்கள் முகமூடி அணிவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2022, 09:22 AM IST
  • கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்று சுவை தெரியாமல் இருப்பது.
  • உணவில் பூண்டு, இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுகளையும் உட்கொள்ளலாம்.
Immunity Booster Foods: கொரோனாவில் இருந்து உங்களை காக்கும் Immunity உணவுகள் title=

Immunity Booster Foods : கொரோனாவைத் தவிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்தி வருகின்றனர். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், நீங்கள் பல நோய்களை எதிர்த்துப் போராடலாம் மற்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும். கொரோனாவின் அறிகுறிகள் உள்ளவர்கள் Vitamin-C உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், இது நோயிலிருந்து குணமடைய உதவியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் சில உணவுகள் உள்ளன, அவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் பானங்கள் குடிக்கவும்
மஞ்சளில் (Turmeric) உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity Booster) அதிகரிக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், கொரோனா (Coronavirus) தொற்றிலிருந்தது நம்மை காத்துக்கொள்ளலாம். எனவே மஞ்சள் கலந்த பானத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஏலக்காய் தூள், குங்குமப்பூ போன்றவற்றை கலந்து பாலில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும்

மசாலா நுகர்வு
கொரோனாவின் அறிகுறிகளில் ஒன்று சுவை தெரியாமல் இருப்பது. அதனால்தான் உங்கள் உணவில் மசாலாப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிவப்பு மிளகாய், மஞ்சள், கிராம்பு மற்றும் கரம் மசாலா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, உணவில் பூண்டு, இஞ்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பிரோஜன் உணவு
பிரோஜன் பழங்கள் மற்றும் காய்கறிகளும் புதிய பழங்களைப் போலவே இருக்கும், எனவே பிரோஜன் உணவை உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியம். கோவிட்-19 தொற்றைத் தவிர்க்க, நீங்கள் பிரோஜன் உணவை உட்கொள்ள வேண்டும். யாராவது கொரோனா அறிகுறிகளைக் கண்டால், இந்த அனைத்து உணவுகளிலும் வைட்டமின்-சி சேர்க்கப்படலாம்.

புரதம் மற்றும் கலோரிகளை உண்ணுங்கள்
புரதத்திற்கு, நீங்கள் முட்டை, மீன் மற்றும் பருப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். இந்த உணவுகள் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நீங்கள் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். வைட்டமின் சி சேர்க்க எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுகளையும் உட்கொள்ளலாம். 

ALSO READ | Deltacron: புதிய டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News