பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்

Best Juices For Women: 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2024, 02:53 PM IST
  • பழங்களில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன.
  • இவற்றின் மூலம் உடலுக்கும் மூளைக்கும் பழங்கள் நன்மைகளை வழங்குகின்றன.
  • இவை மாரடைப்பு போன்ற ஆபத்தான இதய நோய்களைத் தடுக்கும்.
பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம் title=

Best Juices For Women: இன்றைய உலகில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என நாம் கூறுகிறோம். ஆண்கள் மட்டும் முன்னர் செய்த பணிகளை இப்போது பெண்களும் செய்யத் தோங்கிவிட்டார்கள். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்கள் நிற்கிறார்கள், வென்று காட்டுகிறார்கள். ஆனால், பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆண்கள் செய்யத் தொடங்கி விட்டார்களா? இதற்கு பதில் 'இல்லை' என்பதுதான். இன்னும், பெரும்பாலான வீடுகளில் குடும்பப் பொறுப்பு, குழந்தை பராமரிப்பு, முதியவர்களை கவனிப்பது என இவை அனைத்தையும் பெண்கள் மட்டும்தான் செய்து வருகிறார்கள். ஆண்களின் வேலைகளை பெண்கள் பகிர்ந்துகொண்டது போல, பெண்களின் வேலைகளை ஆண்கள் இன்னும் பெரிதாக பகிர்ந்துகொள்ளவில்லை. 

ஒரு பெண்ணின் வாழ்க்கை சிரமங்கள் நிறைந்தது. அதுவும், வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலகம் மற்றும் வீட்டின் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டியிருக்கும். இப்படி இருக்க, இந்த நவீன உலகில், பெண்களின் பொறுப்புகளும், பணிகளும் அதிகரித்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆகையால் இவற்றை செவ்வனே செய்து முடிக்க பெண்களுக்கு அதிகப்படியான உடல் வலிமையும் மன வலிமையும் தேவைப்படுகின்றது. ஆனால், பெண்களால், இந்த பிஸியான வாழ்க்கை முறையில் தங்கள் உடல்நிலையை கவனிக்க முடிவதில்லை. 

குறிப்பாக 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது. இது மட்டுமின்றி எலும்புகள் பலவீனமடைந்தால், அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளிலும் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. ஆகையால், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மிக அவசியமாகும். 

பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில சாறு வகைகளை பற்றி இங்கே காணலாம். 

பெண்கள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய 3 வகையான சாறுகள்:

இந்த சாறுகள் பெண்களின் அழகு, ஆரோக்கியம் என அனைத்திலும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சாறுகள் மூலம் கிடைக்கும் உட்புற ஊட்டச்சத்துக்களால் ஆரோக்கியம் மேன்மையடைவதோடு சருமம், கூந்தல் என அனைத்தின் பராமரிப்பிலும் இவை உதவுகின்றன. பெண்கள் தங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன சாப்பிட வேண்டும் என்பதை உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.

மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த உணவுகளுக்கு ஹலோ சொல்லுங்க.... சிறுநீரகம் சூப்பரா இருக்கும்

1. பல பழங்களின் கலவையான சாறு (Mixed Fruit Juice)

பழங்களில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் உடலுக்கும் மூளைக்கும் பழங்கள் நன்மைகளை வழங்குகின்றன. இது மாரடைப்பு போன்ற ஆபத்தான இதய நோய்களைத் தடுக்கும். கூடுதலாக, இவை கண்கள், தோல் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

2. இளநீர் (Coconut Water)

இளநீர் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. இதில் பல வித மினரல்களும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இது உடலின் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்கின்றது. இளநீர் குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது தோல் தொடர்பான பிரச்சனைகளும் வராமல் தடுக்கிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க காலையில் இளநீர் குடிப்பது மிக உதவியாக இருக்கும்.

3. காய்கறி சாறு  (Vegetable Juice)

காய்கறிகள் எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நம் தினசரி உணவில் கண்டிப்பாக காய்கறிகள் இருக்க வேண்டும். இவை உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து என அனைத்தையும் அளிக்கின்றன. இவை தவிர காய்கள் மூலம் உடலுக்கு தேவையான ஆண்டிஆக்சிடெண்டுகள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கின்றன. தினமும் காய்கறி சாறு உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சரும பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News