எடை இழப்புக்கு ப்ரோக்கோலி காபி: உங்கள் எடை அதிகமாகி, உடலின் வடிவம் மோசமடையத் தொடங்குகிறதோ, அப்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடல் பருமன் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் இதன் காரணமாக, அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க இன்று முதல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினால் வயிறு மற்றும் இடுப்பில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க, நீங்கள் கிரீன் டீ உட்பட பல மூலிகை டீகளை உட்கொண்டிருக்க வேண்டும், ஆனால் ஒரு சிறப்பு காய்கறியின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட க்ரீன் காபியை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
ப்ரோக்கோலி காபியை தினமும் குடியுங்கள்
ப்ரோக்கோலி காபி பற்றி பேசுகையில், இது ஆரோக்கியத்தின் அடிப்படையில் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதிகரித்து வரும் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த பானத்தின் கருத்தை ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (சிஎஸ்ஐஆர்ஓ) வழங்கியது. போதுமான காய்கறிகளை சாப்பிட முடியாதவர்களுக்கு ப்ரோக்கோலி பவுடர் ஒரு சிறந்த வழியாகும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்
ப்ரோக்கோலி காபி மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி?
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், ப்ரோக்கோலி காபி குறைந்த கலோரி பானமாகவும், அதே நேரத்தில் நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவும். ப்ரோக்கோலி போன்ற ஒரு காய்கறி, எடை இழப்புக்கு பெருதும் உதவும் அத்துடன் பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதேபோல் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனுடன், ப்ரோக்கோலி காபியில் நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன, இது கொழுப்பை உடைக்கும் போது எடையைக் குறைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலி காபி செய்வது எப்படி?
இதற்கு ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் பல நாட்கள் காய வைக்கவும். இப்போது அதை அரைத்து பொடி வடிவில் கொடுத்து ஒரு பெட்டியில் சேமிக்கவும். நீங்கள் விரும்பினால், சந்தையில் இருந்து ப்ரோக்கோலி பவுடரையும் வாங்கலாம். இதற்குப் பிறகு நீங்கள் எரிவாயு மீது பாலை சூடாக்கவும். இப்போது சூடான பாலில் ப்ரோக்கோலி பவுடர் கலந்து குடிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ