பல்வலி பிரச்சனையா? இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க

Dental Care: பல்வலி பிரச்சனை உங்களுக்கு உள்ளதா? அப்படி இருந்தால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 24, 2022, 05:56 PM IST
  • பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள்.
  • இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது.
  • பல்வலி இருந்தால் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
பல்வலி பிரச்சனையா? இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க title=

பல்வலியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: இந்நாட்களில் பெரும்பாலான மக்கள் பல்வலியால் அவதிப்படுகிறார்கள். பல காரணங்களால் பல்வலி ஏற்படுகிறது. எனினும், பெரும்பாலும், பல் சொத்தை அல்லது கேவிடி இருப்பதால் பல்லில் வலி இருக்கும். அதே நேரத்தில், விஸ்டம் டூத் வரும்போதும் உங்கள் பற்களில் வலி ஏற்படலாம். பற்களில் பிரச்சனை இருந்தால், சில பொருட்களை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. 

சில பொருட்களை உட்கொள்வதால், உங்கள் பிரச்சனை இரட்டிப்பாகும். பற்களில் வலி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பல் வலியில் இவற்றை உட்கொள்ளாதீர்கள்:

இனிப்பு பொருட்கள்:

பல்வலியின் போது இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் குறிப்பாக இனிப்பு, டாஃபி, சாக்லேட் போன்றவற்றை மறந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உங்கள் பற்களின் வலியை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Diabetes Diet: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்! 

மாவுச்சத்துள்ள உணவுகள்:

பல்வலி இருந்தால் மாவுச்சத்துள்ள பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் உள்ளது. அவற்றை உட்கொள்வதால் பல் வலி அதிகரிக்கும். இதனுடன் மிளகாய் மற்றும் காரம் அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்.

குளிர்பானம்:

பல்வலி இருந்தால் குளிர்பானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சோடா மற்றும் சிட்ரிக் அமிலம் உங்கள் பற்களின் அசௌகரியத்தை அதிகரிக்கும். எனவே பல்வலியின் போது இவற்றை உட்கொள்ள வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள்:

பல்வலி ஏற்பட்டால் சிட்ரஸ் பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம். இதில் ஆரஞ்சு, எலுமிச்சை, மாம்பழம், திராட்சை போன்றவை அடங்கும். ஏனெனில் அவற்றை உட்கொள்வதால் உங்கள் பற்களின் வலி அதிகரிக்கும்.

மது:

மது அருந்துவதால் வாய் வறட்சி ஏற்படும். வறண்ட வாய் என்றால் வாயில் உமிழ்நீர் குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவு பல்லில் ஒட்டிக்கொள்ளும். இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும்.
 
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 3 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவை Kidney Stone அறிகுறியாக இருக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News