எலுமிச்சையின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும், ஆனால் எலுமிச்சை மட்டுமல்ல, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதேபோல் எலுமிச்சம்பழத்தின் நீரை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி1 ஆகியவை நிறைந்துள்ளது. அதேபோல் எலுமிச்சை இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலுக்குள் சென்று பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை இலைகளை எப்படி உட்கொள்ள வேண்டும்?
முதலில் தண்ணீரை சூடாக்கி அதில் எலுமிச்சை இலைகளை கொதிக்க வைக்கவும். இலைகளை நன்கு வேகவைக்கும்போது, அவற்றின் நிறம் அழகற்றதாக மாறும், பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். இப்போது இந்த தண்ணீரில் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
கிட்னி ஸ்டோனில் நன்மை பயக்கும்
எலுமிச்சை இலை தண்ணீர் கிட்னி ஸ்டோனில் நன்மை பயக்கும். இதில் சிட்ரிக் அமிலம் நல்ல அளவில் இருப்பதால் சிறுநீரக கல் வளராமல் தடுக்க உதவுகிறது. எனவே எலுமிச்சை இலைகளின் சாறு சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது.
தலைவலிக்கு நன்மை பயக்கும்
எலுமிச்சை இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது தலைவலி மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், எலுமிச்சை இலை தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இந்த நீர் ஒற்றைத் தலைவலிக்கும் (மைக்ரைன்) நிவாரணம் அளிக்கும்.
மன அழுத்தத்தை போக்க உதவும்
எலுமிச்சை இலையில் உள்ள பண்புகள் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. என்.சி.பி.ஐ அறிக்கையின்படி, எலுமிச்சை இலைகளின் நீர் மன அழுத்தத்தைப் போக்க நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நரம்புத் தளர்ச்சியும் நீங்கும்.
தூக்க பிரச்சனைகளை போக்கும்
உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், எலுமிச்சை இலைகளை குடிப்பது நன்மை பயக்கும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் தூக்கமின்மை நீங்கும். அதேபோல் இந்த இலைகள் உடலின் சோர்வையும் நீக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ