உடல் பருமனை குறைக்கணுமா... உங்களை ஏமாற்றாத 7 நாள் ‘Diet Plan’!

உடல் பருமனை குறைக்க பெரும்பாலனோர் தங்களால் இயன்ற வழிகள் அத்தனையும் கடைபிடிக்கிறார்கள் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறைவதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2023, 05:35 PM IST
  • எடை இழப்பிற்கான சிறந்த டயட் பிளான் மூலம், ஒரு வாரம் முழுவதும் 1000 கலோரிகள் மட்டுமே எடுத்துக் கொள்வீர்கள்.
  • உடல் எடை குறையும் என்பது உறுதி.
  • ஒரு வார காலத்திற்கான டயட் பிளான்
உடல் பருமனை குறைக்கணுமா... உங்களை ஏமாற்றாத 7 நாள் ‘Diet Plan’! title=

தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, சாதாரண எடையை விட 20 சதவிகித எடை அதிகரிக்கும் போது, அதனை உடல் பருமன் என்கிறோம். அளவுக்கதிகமாக கொழுப்புத் திசுக்கள் உடலில் சேருவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. முன்ன்பெல்லாம் 35 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே உடல் பருமன் பிரச்சனை அதிகம் காணப்பட்டது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பல சிறுவர்கள் கூட உடல பருமன் பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஒரு காரணமாக உடலியக்க செயல்பாடுகள் குறைவதும், மற்றொரு காரணமாக சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறையாமல் அதே அளவோ அல்லது அதற்கும் மேலே அதிகரிப்பதையும் கூறலாம். 

உடல் பருமனை குறைக்க பெரும்பாலனோர் தங்களால் இயன்ற வழிகள் அத்தனையும் கடைபிடிக்கிறார்கள் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் உடல் எடை குறைவதில்லை. ஆனால் சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது பல உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் எடை இழப்பிற்கான இந்த சிறந்த டயட் பிளான் மூலம், ஒரு வாரம் முழுவதும் 1000 கலோரிகள் மட்டுமே எடுத்துக் கொள்வீர்கள். ஒரு வாரம் முழுவதும் உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், உடல் எடை குறையும் என்பது உறுதி.

காலையில் சாப்பிட வேண்டியவை

இரவில் 1 வாதுமை பருப்பு, 4 பாதாம், 1 அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். இவை அனைத்தையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர், பெருஞ்சீரகம் தண்ணீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர, ஏதேனும் இரண்டு விதமான சீசன் பழங்களையும் நாள் முழுவதும் சாப்பிடுங்கள். 

ஒரு வார காலத்திற்கான டயட் பிளான்

முதல் நாள்

காலை உணவில், காய்கறிகள் நிறைந்த அவல் உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். பழுப்பு அவலாக இருந்தால் கூடுதல் சிறப்பு. மதிய உணவில், ஒரு சப்பாத்தி அல்லது ஒரு கப் சாதம், 1 கப் பருப்பு உணவு, 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில் வேக வைத்த உணவை அளவாக சாப்பிடுங்கள்.

இரண்டாம் நாள்

காலை உணவில், 1 வெந்தய கீரை சேர்த்து செய்யப்பட்ட உணவுடன் சப்பாத்தி அல்லது தோசை, இட்லி போன்றவற்றை அரை கப் தயிருடன் சாப்பிடுங்கள். தோசை அல்லது இட்லி ராகி மாவு கலந்து செய்யப்ப்பட்டிருந்தால் மேலும் சிறப்பு. மதிய உணவில், ஒரு சப்பாத்தி, 1 கப் பனீர், அரை கப் பருப்பு மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், வெஜிடபிள் கட்லெட் சாப்பிடுங்கள். இது பொரித்ததாக இல்லாமல், தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைத்ததாக இருந்தால் மிகவும் நல்லது.

மேலும் படிக்க | Diabetes: கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் முளை கட்டிய வெந்தயம்!

மூன்றாவது நாள்

காலை உணவில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். மதிய உணவில், 2 ஊத்தாப்பம், 1 கப் சாம்பார், 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். ஊத்தப்பத்திலும் ராகி மாவு கலந்ததாக இருந்தால் கூடுதல் சிறப்பு. இரவு உணவில், புதினா சட்னியுடன் 1 பொங்கல் சாப்பிடவும். இதிலும் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது குதிரைவாலியாக பயன்படுத்தி பொங்கல் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்

நான்காவது நாள்

காலை உணவில், ரொட்டியுடன் 2 வேகவைத்த முட்டை அல்லது 1 முட்டை ஆம்லெட் சாப்பிடுங்கள். முட்டை பிடிக்காதவர்கள் முட்டை தவிர்த்து விடலாம். அதற்கு பதிலாக புரோட்டீன் நிறைந்த காய்கறி அல்லது பன்னீரை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவில், 1 கப் ராஜ்மா, 1 கப் சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் மற்றும் சாலட், முளை கட்டிய தானியங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

ஐந்தாம் நாள்

காலை உணவில், காய்கறிகள் நிறைந்த 1 கப் உப்புமா சாப்பிடுங்கள். இதிலும் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். மதிய உணவில், 1 கப் தயிர், 1 கப் காய்கறி, 1 சாப்பாதி அல்லது சாதம் மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், ராகி தோசை சட்னியுடன் எடுத்துக் கொள்ளுங்கள்

ஆறாம் நாள்

காலை உணவில் புதினா சட்னியுடன் வெஜிடபிள் ஊத்தப்பம் சாப்பிடுங்கள். மதிய உணவில், 3 இட்லிகள் மற்றும் 1 கப் சாம்பார் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுங்கள். இரவு உணவில், 1 கப் காய்கறிகள் நிறைந்த உப்புமா சாப்பிடுங்கள்.
 
ஏழாவது நாள்

காலை உணவில், காய்கறிகளால் செய்யப்பட்ட சேமியா உப்புமா ஒரு கப் சாப்பிடுங்கள். மதிய உணவில், 1 கப் பருப்பு, 1 கப் காய்கறிகள், 1 சப்பாத்தி மற்றும் சாலட் சாப்பிடுங்கள். இரவு உணவில், காய்கறிகளுடன் 200 கிராம் பன்னீர் சேர்க்க வேண்டும். பன்னீரில் அதிகம் புரோட்டின் உள்ளது.

இரவு உணவுக்குப் பிறகு க்ரீன் டீ அருந்தவும்

தினமும் இரவு உணவுக்கு 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு க்ரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சீரகம் டீ, அல்லது பெருஞ்சீரகம் டீ குடிக்கவும். இது உணவை ஜீரணிக்க உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் தினமும் நெல்லிக்காய் போதும்... உடல் எடை சட்டென்று குறையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News