வைரஸ் காய்ச்சல்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு!!

Last Updated : Nov 30, 2016, 03:48 PM IST
வைரஸ் காய்ச்சல்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு!! title=

காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.

அறிகுறிகள்:-

* காய்ச்சல்

* மிகுந்த சோர்வு

* கடுமையான உடல் வலி

* இருமல், தொண்டைப்புண்

* கடுமையான தலை வலி

* வயிற்றில் வலி 

* மூக்கடைப்பு

* தோல் தடித்தல்

சிகிச்சை:-

வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும். ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும். இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே ஆன்டி-வைரஸ்களை எடுத்து கொள்வது சிறப்பாகும்.

தடுப்பு:-

வைரஸ் காய்ச்சல் தடுப்பது எளிதல்ல, அனால் அதன் மூலம் ஏற்படும் தொற்று நோய்யை தவிர்க்கலாம். கைகளை சோப்பால் நன்கு கழுவவும், நெரிசலான இடங்களுக்கு செல்வது தவிர்க்கவும், கை கழுவாமல் முகம், வாய், கங்களை தொடாதீர்கள் மேலும் சூடான தண்ணீர் குடிக்கவும்.

Trending News