உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம் டான்ஸ்

டான்ஸ் ஆடுங்க! வாழ்க்கைய கொண்டாடுங்க! உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க: உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம் டான்ஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2022, 03:22 PM IST
  • டான்ஸ் ஆடினால் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்
  • நடனம் மன அழுத்தத்தைக் குறைக்கும்
  • டான்ஸ் ஆடினால் உடல் எடை குறையும்
உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம் டான்ஸ் title=

ஆரோக்கியத்திற்கு அடிப்படை மனநிம்மதியும் மகிழ்ச்சியும் தான். உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, போதுமான ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும் மனம் மகிழ்வாக இருந்தால் தான் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.

மனதில் மகிழ்ச்சி வந்தாலே ஆடலும் பாடலும் கூடவே வந்துவிடும். மனதிற்கு இதம் தரும் டான்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, தினமும் நடனம் ஆடுவது உடல்நலனை பாதுகாப்பதோடு, சீர்கெட்ட ஆரோக்கியத்தையும் சீர்தூக்கிவிடும்.

உடற்தகுதிக்காக இன்று உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு செல்லும் வழக்கம் வந்துவிட்டது என்றாலும், வேலைபளுவின் காரணமாக  ஜிம்மிற்கு செல்வதும் கடினமாகும் நிலையில் ஆட்டம் ஒன்றே உடல் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் சுறுசுறுப்பையும் உங்களுக்குக் கொடுக்கும்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

நடனம் என்பது மக்களை மிகவும் சுறுசுறுப்பாகவும், உடலை தகுதியுடன் வைக்க உதவுகிறது. அதோடு மனதில் நிம்மதியும் நிறைவையும் ஏற்படுத்தும் கலை இது. ஆரோக்கியமாக இருப்பதற்காக உடபயிற்சிகள் செய்வது அவசியம் என்றநிலையில்,  உடற்பயிற்சிக்கு டஃப் பைட் கொடுப்பது நடனம் ஒன்றுதான்.

மன அழுத்தத்தை குறைப்பது எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்குவது, உடல் எடையை சீராக வைத்திருப்பது, மூளை ஆரோக்கியமாக செயல்படுவது என டான்ஸ் செய்யும் மாயங்கள் பல என்றே சொல்லலாம். 

மற்ற உடல் செயல்பாடுகளைப் போலவே நடனமாடும்போது நரம்பியக்கடத்தியை (neurotransmitter) வெளியிடுகிறது, எண்டோர்பின்கள் (endorphins), இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க தேவையானவை ஆகும்.

மேலும் படிக்க | வேகவைத்த முட்டையை அதிகமா சாப்பிட்டால் ஆபத்து

நடனமாடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடலாம்.

மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்
மன அழுத்தம் குறையும்
உடல் எடை குறையும்
இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்
சிறந்த ஒருங்கிணைப்பு வலிமை மற்றும் சமநிலையை டான்ஸ் நமக்குக் கொடுக்கிறது.

ஆனால் டான்ஸ் ஆடுவதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கும் பார்வையே இருக்கிறது. உண்மையில் டான்ஸ் என்பது எந்த வகையிலும் இருக்கலாம்.

குத்தாட்டமாக இருந்தாலும் சரி, பரத நாட்டியமாக இருந்தாலும் சரி, மைக்கல் ஜாக்சனின் பரபர ஆட்டமானலும் சரி, எதோ ஒரு வகையில் டான்ஸ் ஆடுவது அவசியம்.

டான்ஸ் என்பது உடலை சுறுசுறுப்பாக்கி மனதில் உள்ள உணர்வுகளை அழகாக்கும் ஒரு அற்புதக் கலையாகும். பாரம்பரிய நடனம் சிறந்தது என்றாலும், நமக்கு தெரிந்தது போல எப்படி வேண்டுமானலும் எந்த டான்ஸை வேண்டுமானாலும் ஆடலாம்.

மேலும் படிக்க | தினசரி பீர் குடிச்சா குடலுக்கு நல்லது

அடிப்படையில் நமது உடல் செயற்பாட்டை மகிழ்ச்சியாக செய்வது என்பது தான் இதன் குறிக்கோள். சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதும் தவறில்லை.

சுலபமான சினிமா  நடனம் உங்களுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவும். ஆனால் கீல்வாதம் போன்ற சில நோய்களுக்கு பாரம்பரிய நடன வடிவங்கள் உள்ளன. நடனத்திற்கு நமது முழு உடலையும் ஒருங்கிணைக்கும் சக்தி உண்டு.

நடனம் என்பது டிமென்ஷியா அல்லது அல்சைமர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. டான்ஸ் ஆடுங்க! வாழ்க்கைய கொண்டாடுங்க! உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்க...

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News