உடல் எடையை குறைக்க காலை உணவு: உடல் எடையை குறைப்பது இந்நாட்களில் கடினமான பணியாகிவிட்டது. அதுவும் வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து தொப்பை பிரச்சனை பலரையும் பாடாய் படுத்துகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியத்துக்கு முற்றிலும் நல்லதல்ல. மறுபுறம், தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தையும் கெடுக்கிறது. இதன் காரணமாக, இதிலிருந்து தீர்வு காண மக்கள் பல்வேறு வகையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றுகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி செய்வது முற்றிலும் தவறானது. இதற்கு பதிலாக, காலை உணவில் சில ஆரோக்கியமான உணவு வகைகளை சேர்த்தால், உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற்று, தேவயற்ற எடையை குறைக்க, காலை உணவில் நீங்கள் என்னென்ன பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க இந்த பொருட்களை காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
தயிர், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் சேர்ந்த கலவை
இதை செய்ய, பச்சை தயிர் மற்றும் ஆளிவிதை தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இப்போது அதில் நறுக்கிய ஆப்பிள், மாதுளை, பாதாம் மற்றும் பூசணி விதைகளை கலந்து சாப்பிட வேண்டும். இதை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். ஆகையால், இதை தினமும் காலை உணவாக உட்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | இந்த 4 இலைகளை தண்ணீரில் கலந்து குடித்தால் Blood Sugar Level குறையுமாம்
வாழைப்பழம், இலவங்கப்பட்டை, பாதாம் ஸ்மூத்தி:
இந்த ஸ்மூத்தியை செய்ய, ஒரு வாழைப்பழம், 4 பாதாம், ஒரு கிளாஸ் பால், இரண்டு ஸ்பூன் தயிர், இலவங்கப்பட்டை தூள் கலந்து ஸ்மூத்தியை உருவாக்கவும். இந்த ஸ்மூத்தியை தினமும் காலையில் உட்கொள்ளலாம். எடை இழப்புக்கு வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாழைப்பழத்தில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் பருமனால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில், காலை உணவில் இந்த ஸ்மூத்தியை சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் ஆப்பிள் மற்றும் கீரையின் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
பச்சை ஆப்பிள் ஒன்று, கீரை அரை கப், பாதாம் பால் அரை கப், பேரீச்சம்பழம் ஒன்று பொடியாக நறுக்கியது, முலாம்பழம் விதைகள் ஒரு டீஸ்பூன்.
எப்படி செய்வது:
அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட் செய்து, அதை உட்கொள்ள வேண்டும். ஆப்பிள்களை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆகையால், அதிகப்படியான சத்துகள் கொண்ட இந்த ஸ்மூத்தியை உட்கொண்டால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ நியூஸ் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Belly Fat Reduction: இரவு உணவில் இந்த மாற்றங்களை செஞ்சா உடல் எடை சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ