Health Tips: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரும் தண்ணீரை வெவ்வேறு வழிகளில் உட்கொள்கிறார்கள். சிலருக்கு தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு எலுமிச்சை சேர்த்து தண்ணீர் குடிக்க பிடிக்கும். இது தவிர, மக்கள் விரும்பி சாப்பிடும் பல வகையான பானங்கள் உள்ளன. பல வித உடல் நல பயன்களுக்காக மக்கள் தாண்ணீர் குடிப்பது வழக்கம். இது தவிர, அனைத்து மருத்துவர்களும், நிபுணர்களும் சூடான நீரைக் குடிக்க அறிவுறுத்துகிறார்கள்.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (Health Benefits of Drinking Warm Water)
ஆயுர்வேதத்தில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் குறிப்பிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வெந்நீரின் நன்மைகள் மற்றும் 21 நாட்களுக்கு வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இது தவிர, வெந்நீரை எப்போது குடிக்கக் கூடாது? இதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
எடை இழப்பு (Weight Loss)
எடை இழப்புக்கான பல வழிகளை பற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஜிம் செல்வது, பல வித உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்வது என நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் மிக எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அதில் வெந்நீர் உட்கொள்வதும் ஒன்று. இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. வெந்நீர் மூலம் உடல் எடையை குறைப்பதால் எந்த செலவும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் எளிதாக பராமரித்து, உடல் எடையையும் குறைக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, நவீன ஆய்வுகளிலும், வெந்நீரை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரைக் குடிப்பதை விட வெந்நீரைக் குடிப்பது அதிக பலன் தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. A குழுவிற்கு சாதாரண நீரும், B குழுவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டபோது. வெந்நீர் அருந்தியவர்களின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருப்பது ஆய்வில் காணப்பட்டது. தினமும் 2 லிட்டர் வெந்நீரை உட்கொள்வது அவர்களது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவியாக இருந்தது.
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12 குறைபாடு: சரி செய்வது எப்படி?
வெந்நீர் 3 வழிகளில் உடல் எடையை குறைக்க உதவுகிறது
- உணவை ஜீரணிக்க (Digestion) உதவுகிறது - சூடான நீரை உட்கொள்வதால் உணவை எளிதில் ஜீரணிக்க முடியும்.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது - உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சூடான நீர் உதவுகிறது.
- பசியைக் குறைக்கிறது - உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீரைக் குடிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
எவ்வளவு வெந்நீர் அருந்துவது சரியானது?
அதிக சூடான நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நன்மைகளுடன், பொருட்களை தவறாக உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். 54 முதல் 70 டிகிரி வரையிலான வெப்பநிலையுடன் சூடான நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த வகை நீர் மூளைக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.
மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது
வெந்நீர் மன அழுத்தத்தைக் (Blood Pressure) குறைப்பதற்கும் உதவியாகக் கருதப்படுகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் எந்த மருந்தையும் உட்கொள்வதற்குப் பதிலாக, முதலில் ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும்.
சோம்பு தண்ணீரும் நன்மை பயக்கும்
சோம்பு தண்ணீரும் உங்களை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் உணர மிகவும் உதவியாக இருக்கும். சோம்பை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி தண்ணீரை உட்கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Herbal Tea: மாதவிடாய் வலி மற்றும் இரத்த அழுத்தத்தை சீர் செய்யும் ஆயுர்வேத தேநீர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ