நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களினால் ஏற்படும் நோய்களை, எவ்வாறு நாம் கவனிக்க வேண்டும், மற்றும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்...?
# நாம் தினந்தோறும் பயன்படுத்தும் முக்கியமான பொருள் சிப்பு அதை வாரத்திற்கு ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்வது மிக முக்கியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது சிப்பை மாற்ற வேண்டும். முக்கியமாக வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றுயாகும்.
கவனத்திற்கு : உங்களுடைய வீட்டில் உள்ள கழிவறைக்கு இணையாக அழுக்கு சேரும் மற்றொரு பொருள் சீப்பு தான்.
# காலணிகள் பற்றி நிங்கள் ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்றவது மிகவும் அவசியம். காலணிகளை அடிக்கடி கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று நோய்களுக்கான பிரச்சனைகள் உண்டாகுகிறது.
கவனத்திற்கு : பாதத்தின் அழகு காலணிகள் தான், அழகை மட்டும் பார்க்காமல் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நல்லது.
# பேஷன் என்ற பெயரில் நாம் அனைவரும் பிளாஸ்டிகை பயன்படுத்தி வருகிறோம், பிளாஸ்டிக் டிப்பன் பாக்ஸ்களில் தான் இன்று உணவை எடுத்து செல்கிறோம் அப்படி பட்ட பொருளை மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
கவனத்திற்கு : பிளாஸ்டியில் அதிக நச்சு தன்மை உண்டு. முடிந்த வரை ஸ்டில் டிபன் பயன்படுத்துவது நல்லது.
# தலையணைகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய தலையணை மாற்ற வேண்டும். வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான். தலையணைகளை இரண்டு அல்லது மூன்று வருடம் பயன்படுத்தும் பொது சீராக அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டும். கடைசியாக உங்கள் வீட்டு தலையணையை எப்போது துவைத்தீர்கள்? மாற்றினீர்கள்? என்று கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்றுயாகும்.
கவனத்திற்கு : இவைகளின் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கின்றன.
நாம் விட்டிலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் சிலவற்றை குறிப்பிட்டு உள்ளேன்.