Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில், உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவும் இதற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இந்த காலத்தில் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாகி விட்டது. பல வித முறைகளில் மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், இந்நாட்களில் எடை அதிகரிப்பு மக்களுக்கு சவாலாக உள்ளது. எடை அதிகரிப்பது ஒருவரது ஆளுமையை பாதிப்பது மட்டுமல்லாமல், இது நீண்ட காலத்திற்கு நீடித்தால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுடன் சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம். இயற்கையான வீட்டு வைத்தியத்தின் நல்ல விஷயம் என்னவென்றால், அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தொப்பை கொப்ழுப்பை (Belly Fat) கரைத்து எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் (HoMe Remedy for Weight Loss)
தேன் மற்றும் எலுமிச்சை நீர்
எலுமிச்சை (Lemon) மற்றும் தேன் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன. இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் உட்கொள்ள வேண்டும். இதை தினமும் உட்கொள்வது எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் எலுமிச்சை, தேன் (Honey) கலவை செரிமான அமைப்பில் உள்ள நச்சுகளையும் நீக்குகிறது.
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை வலுவாக்க... டயட்டில் சேர்க்க வேண்டிய சில உணவுகள்!
சீரக தண்ணீர்
சீரக (Cumin) நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதற்கு சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவுகிறது. மேலும் இது வயிற்று ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
ஓமம்
ஓமம் (Celery) ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடுகிறது. ஓம நீர் எடையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு, ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி, பின் உட்கொள்ளவும்.
தயிர் பச்சடி
ரைதா எனப்படும் தயிர் பச்சடி சுவையாக இருப்பதைத் தவிர, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது தவிர, தயிர் ஒபச்சடியில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவை குடலின் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி இந்த பச்சடிகளை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பருமன் குறைய... ‘இந்த’ சிறுதானிய உப்புமாக்களை ட்ரை பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ