தொப்பை தொல்லை இனி இல்லை: இந்த மேஜிக் பானங்கள் குடித்தால் ஒரே வாரத்தில் குறைக்கலாம்

Weight Loss Tips: வயிற்றுப் பகுதியில் அதிகரிக்கும் தொப்பை கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. பல முயற்சிகள் செய்தும் இதை சரி செய்ய முடியவில்லையா? கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் இதற்கு உபயோகமாக இருக்கலாம்.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2023, 09:41 AM IST
  • எலுமிச்சை நீரை உட்கொள்வது எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  • எலுமிச்சை நீரில் பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளன.
  • இது தொப்பை கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது.
தொப்பை தொல்லை இனி இல்லை: இந்த மேஜிக் பானங்கள் குடித்தால் ஒரே வாரத்தில் குறைக்கலாம் title=

Weight Loss tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக எடை கொண்டவர்களும், தொப்பை கொழுப்பு அதிகமாக உள்ளபர்களும் கண்டிப்பாக இவற்றை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க (Weight Loss) முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

தொப்பை கொழுப்பைக் குறைப்பது எப்படி (How To Reduce Belly Fat): 

வயிற்றுப் பகுதியில் அதிகரிக்கும் தொப்பை கொழுப்பை குறைப்பது பலருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. பல முயற்சிகள் செய்தும் இதை சரி செய்ய முடியவில்லையா? கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் இதற்கு உபயோகமாக இருக்கலாம். இதன் பலன் ஒரு வாரத்திலேயே தெரியும். இன்றைய வாழ்க்கை முறையால், மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தில் சரியான கவனம் செலுத்துவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், தங்கள் எடை மற்றும் தொப்பையை (Belly Fat) குறைக்க விரும்புவோர் தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக சில ஆரோக்கியமான பானங்களை உட்கொள்ள வேண்டும். அந்த பானங்களை பற்றி இங்கே காணலாம்.

தொப்பையை குறைக்க உதவும் பானங்கள் 

இஞ்சி தண்ணீர்

ஜிஞ்சரோன் மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் இரண்டு சேர்மங்கள் இஞ்சியில் (Ginger) அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றின் பண்புகள் காரணமாக இஞ்சி நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். இதை செய்ய, இஞ்சியை துருவி, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, தேநீருக்கு பதிலாக தினமும் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | இதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கால்கள் & பாதங்கள்! மாரடைப்பை காட்டும் அறிகுறிகள்

மஞ்சள் நீர்

மஞ்சள் (Turmeric) மசாலாப் பொருள் மட்டுமல்ல, மருத்துவக் குணங்களும் இதில் நிறைந்துள்ளன. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சள் தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மஞ்சள் நீர் செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடல் உப்பசத்தைக் குறைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை தண்ணீர்

தினமும் காலையில் இலவங்கப்பட்டை (Cinnamon) தண்ணீரை குடிப்பதால் பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, மேலும் இது உங்கள் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

எலுமிச்சை பாணம்

எலுமிச்சை நீரை (Lemon Water) உட்கொள்வது எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சை நீரில் பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தொப்பை கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கலாம். இப்படி குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடையில் வித்தியாசத்தை காண முடியும்.

மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ‘இந்த’ 5 பழங்களை தோலுடன் உண்டால் டயபடீஸ்க்கு குட் பை சொல்லலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News