உங்களை நீங்கள் காதலித்தால், இந்த டிப்ஸை மிஸ் பண்ணாதீங்க! அழகாய் வாழ உணவு வழிகள்

Diet For Health: ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடையையும் பராமரிக்க உதவும் உணவுகள்... உடல் மீது காதல் இருந்தால் இதையெல்லாம் கடைபிடிக்கலாம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 3, 2023, 06:39 AM IST
  • ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா?
  • எடை இழப்பிற்கான டயட் பிளானில் தவிர்க்க வேண்டியவை
  • உணவுக் கட்டுப்பாடா இல்லை உடல் மீது காதலா?
உங்களை நீங்கள் காதலித்தால், இந்த டிப்ஸை மிஸ் பண்ணாதீங்க! அழகாய் வாழ உணவு வழிகள் title=

Health Is Wealth: உணவுக் கட்டுப்பாடு என்பது ஒருவரின் உடல் நிலையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, குறிப்பாக உடல் பருமனைக் குறைக்கும் நோக்கத்திற்காக, உணவு உட்கொள்ளலை ஒழுங்குபடுத்துவதற்கான முதல் படியாகும். நாம் உண்ணும் உணவில், நமது செயல்பாட்டிற்கு தேவையான ஆற்றல் மூலங்களான மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் எனப்படும் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் ஆகியவை சமசீராக இருக்க வேண்டும். 

நமக்கு தேவைப்படுவதை விச நாளொன்றுக்கு 500-1000 கலோரிகள் ஆற்றல் குறைவாக இருக்குமாறு உணவு உட்கொண்டால்,, உடல் நீர் ஆரம்ப இழப்பின் காரணமாக விரைவான ஆரம்ப எடை இழப்பை உருவாக்குகிறது, குறிப்பாக அந்த உணவில் கார்போஹைட்ரேட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டால் உடல் பருமன் குறையும். தொடக்கத்தில் இது சரியாக இருந்தாலும், நீரிழப்பின் ஆரம்ப விளைவுகளுக்குப் பிறகு, கொழுப்பு இழப்பு என்ற செயல்முறை தொடங்கும்.

ஆனால், அனைவருக்கும் இந்த உணவுத் திட்டம் சரி வருமா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே சரியானதாக இருக்கும். அதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த முதன்முதலாக உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்கள் செய்யும் தவறுகள் சில உள்ளன. இந்த டயட் தவறுகளைத் தவிர்த்தால், அவர்களது இலக்கு நிறைவேறும்.

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கணுமா... உங்களை ஏமாற்றாத 7 நாள் ‘Diet Plan’! 

உணவுக் கட்டுப்பாடு தவறுகள்
ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுக் கட்டுப்பாட்டை தொடங்குவது என்பது மிகவும் சரியிஆன முடிவு என்றாலும், பவர், குறிப்பாக ஆரம்பநிலையினர், பொதுவான சில உணவுத் தவறுகளை செய்கின்றனர், இந்தத் தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக சீர்குலைத்துவிடலாம்.  
 
தீவிர உணவுக் கட்டுப்பாடு
மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்று, தீவிர உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதாகும், இது கலோரி உட்கொள்ளலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது அல்லது உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் பற்றாக்குறையை உருவாக்குகிறது.

diet plan

பொதுவாக, தீவிர உணவு கட்டுப்பாடு என்பது தொடக்கத்தில் நல்ல பலன் அளிக்கும் அதே வேளையில், அவை பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தீவிர உணவுக் கட்டுப்பாட்டுக்கு பதிலாக, பலவகையான உணவுகளை உள்ளடக்கிய சீரான உணவில் கவனம் செலுத்துங்கள்.

உணவைத் தவிர்ப்பது
உணவைத் தவிர்ப்பது என்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் எடை மற்றும் ஆரோக்கிய இலக்குகளைத் தடுக்கும் ஒரு தவறு. இது நாளின் பிற்பகுதியில் அதிகப்படியான உணவு உண்ண வழிவகுக்கும். இதனால், உங்கள் உடல் ஆற்றல் சமச்சீரற்ற நிலையை எதிர்கொள்ளும். அதுமட்டுமல்ல, நீண்ட நேரம் பட்டினி அதன்பிறகு உணவு என்பது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் எதிரொலிக்குக்ம். அதுமட்டுல்ல, உணவின் மீதான கட்டுப்பாடு, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை நோக்கி உங்களை ஈர்க்கலாம்.

எனவே அளவாக குறிப்பிட்ட இடைவெளிகளில் சாப்பிடவும், ஆனால் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். நாள் முழுவதும் வழக்கமான, சீரான உணவை உண்பதையே நோக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
 
பதப்படுத்தப்பட்ட உணவுகள் 
சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது பொதுவான உணவுக் குறைபாடாகும். இந்த உணவுகளில், அதிக கலோரிகள் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும். எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற முழு, பதப்படுத்தப்படாத உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு
போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் தவறு. உடலில் நீரிழப்பு ஏற்படும்போது ஏற்படும் சோர்வை, பசி என்று தவறாகக் கருதி தேவையில்லாமல் தின்பண்டங்களை உண்பதற்கு வழிவகுக்கும். போதுமான நீரேற்றத்துடன் இருப்பது வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  

கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவு
உணவின் சுவையும் மணமும் மனம் கவர்வதாக இருந்தால், கட்டுப்படுத்த முடியாமல், உணவை உண்பது ஒரு பொதுவான தவறாக இருக்கிறது. மன உளைச்சல், சலிப்பு அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும்போது தோன்றும் ஒருவிதமான மன அழுத்தம், உணவு அதிகமாக உண்பதற்கு வழிவகுக்கும்.

அதுமட்டுமல்லாமல், உணவு கட்டுப்பாடு என்னும் டயட் இருக்கிறோம் என்ற எண்ணமும், அதைப் பற்றி வெளியில் பெருமையாக பேசியதையும் நிரூபிப்பதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது மிகவும் தவறு. ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு மாதிரியானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் உணர்த்தும் குறிப்பை அதிலும் குறிப்பாக, பசி குறிப்புகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலமும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்திற்கான உணர்ச்சித் தூண்டுதல்களைக் கண்டறிந்து அதை சீர் செய்வதன் மூலமும் உங்கள் உணவு பழக்கத்தை முறைப்படுத்துவது உங்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதற்கான உண்மையான அர்த்தமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் தினமும் நெல்லிக்காய் போதும்... உடல் எடை சட்டென்று குறையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News