புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) குறித்து சமூக ஊடகங்களில் மற்றொரு விசித்திரமான கருத்து ஒன்று உலா வருகிறது. மது குடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பது தான் அது. ஆனால் இது உண்மையா...?
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் (Coronavirus) ஆபத்து அதிகரித்து வருகிறது. தேசிய தலைநகரம் உட்பட நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மொத்தம் 29 பேருக்கு பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இப்படி அனைவரையும் பயமுறுத்தும் கொடூர வைரஸிலிருந்து பாதுகாக்க பல்வேறு கூற்றுக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று மது குடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்காது. வாருங்கள்... இந்த கூற்றுக்கு பின்னால் உள்ள உண்மையை அறிந்து கொள்வோம்!!
உண்மையில், வெட்டப்பட்ட ஒரு செய்தித்தாளின் பகுதி கண்மூடித்தனமாக சமூக ஊடகங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் தலைப்பு "இனி அழத் தேவையில்லை.. கொரோனா ஒரு பேக்கில் அடைக்கப்படும்..." என்பது தான்.
மேலும் படிக்க: கொரோன வைரஸுக்கு பயந்து மனைவியை bathroom-ல் பூட்டிவைத்த கணவர்!!
செய்தித்தாளில் வெளியிடப்பட்ட இந்த செய்தியின்படி, மது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸால் ஆபத்து இல்லை. ஆனால் இந்த கூற்று உண்மை என்பதை நிரூபிக்க சில ஆராய்ச்சிகள் மேற்கோள் காட்டப்படுகிறது.
கொரோனோ வைரஸ் (Coronavirus) ஆல்கஹால் தொடர்புக்கு வந்தால், ஒரு நிமிடத்திற்குள் கொல்லப்படும். அதே நேரத்தில் ப்ளீச் பயன்பத்தினால் 30 வினாடிகளில் வைரஸை அகற்றும் என்று ஜெர்மனியின் ஆராய்ச்சியை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
மேலும் படிக்க: OMG... Paytm ஊழியர்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..!
சமூக ஊடகங்களில் பரவும் இந்த கூற்றுக்களின் உண்மையை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே உண்மையை அறிய, டெல்லியில் வசிக்கும் ஒரு மூத்த டாக்டரிடம் கேட்டபோது, முதலில் சிரித்த டாக்டர் அதன்பிறகு, "மது (Alcohol) குடிப்பவர்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் தெளிவாக கூறினார்.
அவர் கூறியது, மது அருந்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், எந்தவொரு வைரஸையும் எதிர்த்துப் போராடுவதில் அவர்களின் உடல் பலவீனமாக இருக்கும். எங்களை பொறுத்த வரை மது குடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது எனக்கூறுவது தவறானது என்று கூறினார்.