எங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...!!!

சீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2020, 12:33 AM IST
  • சீனாவின் வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர்.
  • ஜெனீவாவில் நடந்த மாநாட்டில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்தாலும், அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று WHO அழைப்பு விடுத்தது.
  • வைரஸ் முதலில் வெளவால்களிலிருந்து வந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது.
எங்கிருந்து வந்தது COVID-19.. ஆணிவேரை ஆராய்கிறது WHO ...!!!

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  (Tedros Adhanom Ghebreyesus)  திங்களன்று கொரோனா வைரஸின் ஆணிவேரை கண்டறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

சமீபத்தில், பிரேசிலில் கோவிட் -19 (COVID-19) தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் கூர்மையான அதிகரிப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அவர், அதன் நிலை "மிகவும் கவலை அளிக்கிறது" என்றார்.

முன்னதாக, WHO, அதாவது உலக சுகாதார அமைப்பின் அவசர கால உயர்  நிபுணர், சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உணவு சந்தையில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட  நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகவில்லை என்று WHO கூறுவது "ஊகத்தின் அடிப்படையிலானது" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் விலங்களிடம் எவ்வாறு ஏற்பட்டது, முதன்முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு சென்றது என்பதை ஆராய உதவும் வகையில், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் விலங்கு சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர்களின் குழுவை சீனாவுக்கு அனுப்ப WHO பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

சர்வதேச விசாரணைக்காக அடித்தளத்தை அமைப்பதற்காக ஐ.நாவின் சுகாதார நிறுவனமான உலக சுகாதார மையம், ஜூலை மாதம் பெய்ஜிங்கிற்கு ஒரு குழுவை அனுப்பியது. ஆனால் தொற்று ஏற்பட்ட முதல் மனிதனை அடையாளம் காண,  தொற்றுநோயியல் ஆய்வுகளைத் தொடங்க பெரிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் செல்ல முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

சீனாவின் (China) வுஹான் நகரில் இறைச்சிக்களை விற்கும் சந்தையில், உலகை ஆட்டி படைத்து வரும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்பினர். அங்கு கடந்த ஆண்டு பிற்பகுதியில் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

ALSO READ | COVID-19 நிலைமை பற்றி விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!!

ஜெனீவாவில் நடந்த மாநாட்டில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்தாலும், அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று WHO அழைப்பு விடுத்தது.

வைரஸ் முதலில் வெளவால்களிலிருந்து வந்தது என்று பரவலாகக் கருதப்படுகிறது.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில், WHO அமைத்துள்ள 10 சர்வதேச நிபுணர்களின் குழு, தங்கள் சீன நிபுணர்களுடன் முதல் சந்திப்பை நடத்தியதாகக் கூறியது.

ALSO READ | ராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News