ஆன்மீகம் பற்றி பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும்... ஹெச். ராஜா பேச்சு

TN Latest News Updates: ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் நேற்று ஆளுநர் பேசியது மிகச் சரியான கருத்து என்றும் ஹெச்.ராஜா பேசி உள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Sep 6, 2024, 04:42 PM IST
  • தமிழக ஆளுநர் தமிழகத்தின் கல்வியின் தரம் குறித்து பேசியது சரியே - ஹெச். ராஜா
  • அதிமுக உடன் கூட்டணி குறித்து பாஜக தலைமையை முடிவெடுக்கும் - ஹெச். ராஜா
  • வக்பு வாரிய இட ஊழலுக்கு காரணம் காங்கிரஸ் மற்றும் திமுகதான் - ஹெச். ராஜா
ஆன்மீகம் பற்றி பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும்... ஹெச். ராஜா பேச்சு title=

Tamil Nadu Latest News Updates: திருச்சியில் உள்ள திருச்செந்தூறை உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்பு வாரிய இடத்திற்கு சொந்தமானதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் திருச்சி திருச்செந்துறை கிராமம் இடம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த சட்டத் திருத்தம், இந்திய பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூஜூ நாடாளுமன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் வக்பு வாரிய இடமாக உள்ளது என பேசியதால் இந்திய அளவில் இந்த கிராமம் பேசும் பொருளானது.

திருச்செந்துறையில் ஹெச். ராஜா

இந்நிலையில், வக்பு வாரிய சர்ச்சைக்குள்ளான இக்கோவிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா இன்று வழிபாடு செய்தார். அப்போது கிராம மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் வழிபாட்டிற்கு பின்னர் திருச்செந்துறை கிராமத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா பேட்டியளித்தார்.

மேலும் படிக்க | சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை - உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

அதில்,"திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக கூறப்பட்டது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் கோவில் உள்ளிட்ட இடங்கள் எங்களுக்கு சொந்தமான இடங்கள் என வக்பு வாரியம் உரிமை கோரியது.

இதே போல தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வெல்லூர் இந்த மாதிரி பல மாவட்டங்களில் அதிகமான இடங்கள் எங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கூறியது. வக்பு வாரியம் 1995ஆம் ஆண்டு சட்டம் வரும்போது இவர்களுக்கு 4 லட்சம் ஏக்கர் மட்டுமே சொந்தமாக இருந்தது.  ஆனால் இன்று 9 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக உள்ளது. இவை எல்லாமே எந்த ஆதாரமும் இல்லாமல் தற்பொழுது உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல.

வக்பு வாரிய பிரச்னை

இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இஸ்லாமிய தலைவர்களும் வரவேற்கின்றனர். வக்பு வாரிய இட ஊழலுக்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், திமுகவும்தான். தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது.

தற்போது தமிழகத்தில் பொய்யர்கள் ஆட்சி நடக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நான் இந்த கிராமத்திற்கு வந்தபோது அப்போது இந்த ஊரில் இடத்தை விற்பனை செய்ய வக்பு வாரியத்தில் அனுமதி வாங்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் மக்கள் போராட்டத்தாலும், எழுச்சியாலும் தற்போது அரசு இந்த பிரச்சனையில் பின்வாங்கியுள்ளது. 

ஆளுநர் கருத்து சரி...

நாங்கள் பாஜகவின் சாதனைகளை கூறித்தான் மக்களிடம் சென்று சேர்கிறோம். ஆன்மீகம் பற்றியும், நீதி போதனைகள் பற்றியும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். நேற்று ஆளுநர் அவர்கள் பேசியது மிகச் சரியான கருத்து. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரியில்லை" என்றார்.

மேலும் அவர் பிஎம் ஸ்ரீ (PM Shri) திட்டத்திற்கு நிதி தரவில்லை என இங்கு உள்ள ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அந்தத் திட்டத்திற்கு நீங்கள் கையெழுத்து விட்டால்தான் நிதி தர முடியும் என்பது விதி. நாங்க இதற்காக குழு அமைத்திருக்கிறோம், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம் என்றார்கள். அப்படி உறுதியளித்த பின் தற்போது பின்வாங்கி இருக்கிறார்கள்.

'மோசமான நிலையில் அரசு பள்ளிகள்'

ஆளுநர் அவர்கள் ரெண்டு விஷயம் தெளிவாக கேட்டு இருக்கிறார். பத்தாம் வகுப்பு படித்த மாணவனுக்கு நான்காம் வகுப்பு பாடம் படிக்க தெரியவில்லை. இது பல சர்வேயில சொல்லப்பட்ட விஷயம்தான். அதே மாதிரி 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மூன்றாம் வகுப்பின் கணக்கு போடுவதற்கு தெரியவில்லை. அப்படி என்றால் தனியார் பள்ளியில  சிலர் படித்து தனிப்பட்ட முயற்சியாலும், அரசுப் பள்ளியில் அதேபோல தனிப்பட்ட முயற்சியாலும்தான் ஒரு சிலர் தங்கள் லட்சியத்தை அடைகின்றனர். 

அரசு பள்ளியில் கற்பித்தல் தரம் குறைவாக உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது, அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளியில் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, ஆனால் கல்வியின் தரம் தனியார் பள்ளியில் நன்றாக உள்ளது. ஆகையால் ஆளுநர் கூறியது சரியே" என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, "இதுகுறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. கட்சித் தலைமை தான் பதிலளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கிசுகிசு : பரவும் காவிமயம்... தூங்கும் ஈரோட்டு இயக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News