Latest News Pranitha Subhash Baby : தமிழில், வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், வெகு சீக்கிரமாகவே பிரபலமாகி விட்ட நடிகை, பிரணிதா. இவர், தமிழில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரணிதா:
பிரணிதாவை, தமிழ் ரசிகர்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்த படம், உதயன். இந்த படத்தில் அவர் பிரியா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவரை பிரபலமாக்கிய படம் சகுனி. இதில், அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அதன் பிறகு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கவே இவருக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து, 2017ஆம் ஆண்டு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திலும், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திலும் நடித்தார். பிற தென்னிந்திய மொழி படங்களில் இடை விடாது நடித்து வரும் இவர், தமிழ் படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
மேலும் படிக்க | டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!
இளம் வயதில் இரண்டு குழந்தைகள்..
நடிகை பிரிணிதா, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரணிதா, கடந்த 2021ஆம அண்டு மே மாதம் 30ஆம் தேதி, நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிம்பிளாக சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து, இவர் 2022ஆம் ஆண்டு பெண் குழந்தைக்கு தாயானார். சில நாட்களுக்கு முன்னர், தான் இரண்டாம் முறை கர்ப்பம் தரித்திருப்பதாக பிரணிதா தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதில் இவரது கணவரும் வயிற்றை தள்ளிக்கொண்டு இவருடன் போட்டோ எடுத்திருப்பது வைரலானது.
இந்த நிலையில், பிரணிதாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. கையில் குழந்தையுடனும், ஒரு பக்கத்தில் கணவருடனும் பிரணிதா இருப்பது போல அந்த புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த செய்தியை கேள்விபட்ட ரசிகர்கள், பிரணிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிற நடிகைகளுடன் ஒப்பிடுகையில், பிரணிதா 31 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
தமிழில் நடிக்க வராத பிரணிதா..
நடிகை பிரணிதா, திருமணம் முடிந்தாலும் தனது சினிமா வாழ்க்கையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். 2010ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், இதுவரை 4 தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வருவதால் இவர் தமிழ் திரையுலகிற்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் கூட மலையாளத்தில் தங்கமணி என்ற படத்திலும், கன்னட மொழியில் ராமன அவதாரா என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ