கான்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடிந்துள்ளனர்!
உத்திர பிரதேச மாநிலத்தில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கான்பூரில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று மழையில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் வீட்டின் அருகாமையில் நின்றிருந்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தினை அப்பகுதியில் இருந்த மக்கள் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் திடீரென கட்டிடன் இடிந்து விழுவதும், விழுந்த பின்னர் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதுமாய் காட்சியளிக்கின்றது.
#WATCH: A 3-storey building collapses in Kanpur; 2 injured. pic.twitter.com/fQgNvLG8m4
— ANI UP (@ANINewsUP) July 31, 2018
இதற்கு முன்னதாக கடந்த பிப்., 2018 ஆம் ஆண்டு இதேப்போன்று கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
கான்பூரில் இதுப்போன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல் முறை அல்ல, மழையின் போது இதுப்போன்று நிகழ்வது வழக்கமான நிகழ்வாகவே தான் அமைந்து வருகின்றது!