புது டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தற்போது வரை வருவாய் ஆவணங்களில் 94 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெக்கார்ட்ஸ் நவீனமயமாக்கல் திட்டத்தின் (டிஐஎல்ஆர்எம்பி) கீழ், நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதன் ஒரு பகுதியாக 98% பழைய வருவாய் வரைபடங்களை ஸ்கேன் செய்துள்ளது.
இதுக்குறித்த தகவல்கள் மத்திய இணைச் செயலாளர் ஹுகும் சிங் மீனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தெரியவந்தது. டிஜிபிகளுடனான (ஜியோ ரெஃபரன்சிங் - Geo Referencing) கணக்கெடுப்பு முடிந்துவிட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் யுடி நிலை தரவு மையம், நவீன பதிவு அறைகள் கொண்ட 217 தெஹ்ஸில்களும் மற்றும் 77 சர்வே & லேண்ட் ரெக்கார்ட் அலுவலகங்கள் விரைவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்படும். எந்தவொரு சட்டவிரோத உள்ளீடுகள் இந்த தரவில் ஈடுபட முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் சந்ததியினரர்களை பாதுகாக்க துறைக்கு உதவுகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.