கொரோனா பாதிப்பு எதிரொலி; சந்தையில் காய்கறி விற்கும் பிரபல நடிகர்...

கொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. அவர்களின் பொருளாதார தேவைக்கு பல்வேறு வழிகளை தேடி ஓட வைத்துள்ளது. 

Updated: Jun 29, 2020, 02:46 PM IST
கொரோனா பாதிப்பு எதிரொலி; சந்தையில் காய்கறி விற்கும் பிரபல நடிகர்...
Screengrab

கொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. அவர்களின் பொருளாதார தேவைக்கு பல்வேறு வழிகளை தேடி ஓட வைத்துள்ளது. 

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் காய்கறி விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார். 

நடனமாடி, பாடல் பாடி காய்கறி விற்கும் அவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது டிக்டோக் வீடியோவிற்காக பாடல் பாடி காய்கறி விற்கும் ஜாவேத் ஹைதர், தனது வண்டியில் உள்ள காய்கறிகளை எவ்வாறு விற்பனை செய்கிறார் என்பதை இதில் காணலாம். 

ஜாவேத் ஹைதர் பற்றி கூறுகையில் அவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், குறிப்பாக பாலிவுட்டில் பணியாற்றியுள்ளார். ஜாவேத் ஹைதர் சவ்தன் ஏக் அத்புத் கஹானி, கமியாசா போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 

ஜாவேத் நிதி நெருக்கடியுடன் போராடுகிறார் என்பதை குறிப்பிட்டு, டோலி பிந்த்ரா தனது ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிரும்போது, ​​டோலி பிந்த்ரா, "பிரபல நடிகர், இன்று காய்கறிகளை விற்பனை செய்கிறார்," என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். 

ஜாவேத் நிலை குறித்து அவரது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜாவேத் இதுகுறித்து பெரிதும் கவலை இன்றி வாழ்கின்றார். தான் இந்த வீடியோவில் நடித்துள்ளபோதும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனமாடி காய்கறிகளை விற்கிறார்.

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடலும் மிகவும் தனித்துவமானது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், 'உலகில் வாழ, செய்யும் வேலையை பிரியத்துடன் செய்யுங்கள்' என்ற தத்துவத்தை தெரிவிக்கிறது.

மற்றொரு ட்வீட்டில் டோலி., "ஜாவேத் ஹைதர் ஒரு இந்திய நடிகர், அவர் 'பாபர்' (2009) மற்றும் தொலைக்காட்சி தொடரான ​​'ஜென்னி அர் ஜுஜு' (2012) ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'லைஃப் கி ஐசி கி டீசி' படத்திலும் பணியாற்றினார் எனவும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.