தமிழகத்தில் கூடுதல் NEET தேர்வு மையங்கள் அமைக்கப்படும்!

தமிழக மாணவர்கள் இனி வேறு மாநிலங்களில் NEET தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 22, 2018, 06:08 PM IST
தமிழகத்தில் கூடுதல் NEET தேர்வு மையங்கள் அமைக்கப்படும்! title=

தமிழக மாணவர்கள் இனி வேறு மாநிலங்களில் NEET தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

சென்னை IIT-ல் நடைப்பெற்ற  Smart India Hackathon Hardware Edition Finale 2018-ல் இன்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துக்கொண்டு உறையாற்றினார். நிகழ்ச்சியின் பின்னர் அவர் IIT வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக மாணவர்கள் இனி வேறு மாநிலங்களில் NEET தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு துறைகளிலும் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளை காண மாணவர்களால் முடியும். புதுமையான விஷயங்களை செய்வதன் மூலம் இந்த தீர்வினை மாணவர்கள் காணுவர் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட 200 திட்டங்களை செயல்படுத்த ரூ.600 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தாண்டு மேலும் 200 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NEET தேர்வு கேள்விகளில் ஏற்படும் தவறுகளை தவிர்க்க தமிழக அரசிடம் நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் கோரப்படும், தமிழக மாணவர்கள் இனி வேறு மாநிலங்களில் NEET தேர்வு எழுதும் நிலை ஏற்படா அளவிற்கு தமிழகத்திலேயே அதிக அளவிலான NEET தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News