'காந்தியடிகளின் இந்தியாவில் இதை எதிர்பார்க்கவில்லை': ஆப்கான் பெண் நாடாளுமன்ற எம்.பி

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆயுதமேந்திய தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு மணி நேரத்தில், ரண்கினா கார்கர் என்ற ஆப்கான் பெண் எம்.பி. ஒருவர் நாட்டிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 02:42 PM IST
'காந்தியடிகளின் இந்தியாவில் இதை எதிர்பார்க்கவில்லை': ஆப்கான் பெண் நாடாளுமன்ற எம்.பி title=

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆயுதமேந்திய தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு மணி நேரத்தில், ரண்கினா கார்கர் என்ற ஆப்கான் பெண் எம்.பி. ஒருவர் நாட்டிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் கார்கர் சம்பந்தப்பட்ட சம்பவம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.

ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்தான்புல்லிலிருந்து ஆகஸ்ட் 20 அன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அந்த பெண் எம்.பி வந்துள்ளார். இருப்பினும், அவரால் குடியேற்ற செயல்முறைகளை (Immigration Check) பூர்த்தி செய்ய முடியாமல் போனது. தான் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு மணி நேரத்தில் ஐஜிஐ விமான நிலையத்தில் இருந்து திரும்ப அனுப்பப்படதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இதே பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்கு (India) பல முறை பயணம் செய்திருப்பதாக கார்கர் கூறினார். ஆனால் இந்த முறை, குடிவரவு அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறி அவரை காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!

இந்தியாவில் தன்னை இப்படி நடத்துவார்கள் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கார்கர் தெரிவித்துள்ளார். "இதை நான் காந்திஜியின் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் ஒரு பெண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி நடத்தியுள்ளார்கள். 'மன்னிக்கவும், எங்களால் உங்களுக்காக எதுவும் செய்ய முடியாது' என்று விமான நிலையத்தில் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்," என்று அவர் கூறினார்.

கார்கர் வோலேசி ஜிர்காவில் உறுப்பினராக உள்ளார். இந்தியாவுடன் பரஸ்பர ஏற்பாட்டின் கீழ் விசா (Visa) இல்லாத பயணத்தை எளிதாக்கும் தூதாண்மை அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். கார்கர் 1985 இல் மசார்-இ-ஷெரீப்பில் பிறந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது காபூலுக்கு (Kabul)விமானங்கள் இல்லாததால், தான் இஸ்தான்புல்லில் சிக்கியிருப்பதாக 36 வயதான நாடாளுமன்ற உறுப்பினரான கார்கர் கூறியுள்ளார்.

ALSO READ: ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்தவர்களுக்கு கோவிட் தொற்று: மருத்துவமனையில் அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News