இந்த மாதத்தின் இறுதியில் துருக்கி செல்லத் திட்டமிட்டிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்!
டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் கடந்த மாதம் நடந்த போது, அதில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசினார். அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும், அங்கு மனித உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதன் எதிரொலியாக இந்த மாதம் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் துருக்கி செல்ல திட்டமிட்டிருந்த மோடி, தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.
அத்துடன், துருக்கியின் அனடோலு கப்பல்கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கு 45 ஆயிரம் டன் கப்பல் கட்டுவதற்காக அனுமதித்திருந்த டெண்டரையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக துருக்கி செல்ல உள்ளார். சவுதி அரேபியா சென்று அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காரா செல்ல இருந்தார். அங்கு அக்.27-28 ஆம் தேதிகளில் மெகா முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. துருக்கி அதிபரின் பாக். ஆதரவு பேச்சையடுத்து மோடியின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
"வருகை ஒருபோதும் இறுதி செய்யப்படவில்லை, எனவே ரத்து செய்யப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று ஒரு MEA வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஐ.நா பொதுச் சபையில் தனது உரையின் போது காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டை எர்டோகன் கடுமையாக ஆதரித்தது மற்றும் இந்தியா பரவலாக மனித உரிமை மீறல்களைக் குற்றம் சாட்டியது.
எர்டோகன் தனது உரையில், காஷ்மீர் தொடர்பான ஐ.நா. தீர்மானங்களின் பிரச்சினையை எழுப்பியதோடு, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் காரணமாக காஷ்மீரில் "எட்டு மில்லியன் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினார். காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தத் தவறியதாக அவர் விமர்சித்தாது குறிப்பிடத்தக்கது.