‘வேலை இருக்கு; தகுதியான ஆட்கள் இல்லை’ என்ற கருத்துக்கு கங்வார் விளக்கம்!

வேலை இருக்கு; வேலைக்கு தகுதியான ஆட்கள் தான் இல்லை என்ற சாட்சியான கருத்துக்கு சந்தோஷ் கங்வார் புதிய விளக்கம்!!

Last Updated : Sep 16, 2019, 10:41 AM IST
‘வேலை இருக்கு; தகுதியான ஆட்கள் இல்லை’ என்ற கருத்துக்கு கங்வார் விளக்கம்! title=

வேலை இருக்கு; வேலைக்கு தகுதியான ஆட்கள் தான் இல்லை என்ற சாட்சியான கருத்துக்கு சந்தோஷ் கங்வார் புதிய விளக்கம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது என்றும் இந்தியாவில் வேலைக்கு இங்கு பஞ்சமில்லை என்றும் குறிப்பிட்டார். 

ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் நம் நாட்டில் இல்லை என குறிப்பிட்ட அவர்,  வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில், அவர்கள் வழங்கும் வேலைக்கு இங்கு தகுதியானவர்கள் இல்லை என கூறுவதாக தெரிவித்துள்ளார்.  நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து,  மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ் கங்வார் தனது அறிக்கையில் “வேறுபட்ட சூழல் இருந்தது” என்று கூறி ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் மக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அவரது கருத்து கவனம் செலுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நான் கூறிய கருத்து  வேறுபட்ட சூழலைக் கொண்டிருந்தது, திறன்கள் இல்லாதது மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க அரசாங்கம் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைத் திறந்துள்ளது, ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் வட இந்தியர்களுக்கு தகுதியில்லை என கூறி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

Trending News