AgustaWestland முறைகேடு: கிரிஸ்டியன் ஜேம்ஸ்மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜர்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் முறைகேடு வழக்கில் கிரிஸ்டியன் ஜேம்ஸ்மைக்கேலை CBI தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்! 

Last Updated : Dec 5, 2018, 10:23 AM IST
AgustaWestland முறைகேடு: கிரிஸ்டியன் ஜேம்ஸ்மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜர்  title=

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் முறைகேடு வழக்கில் கிரிஸ்டியன் ஜேம்ஸ்மைக்கேலை CBI தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்! 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டின் மைக்கேல் விசாரணைக்காக CBI அதிகாரிகளால் இந்தியா அழைத்து வரப்பட்டார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோருக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் இடைத் தரகராக செயல்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டின் மைக்கேல். அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சுமார் 225 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக மைக்கேல் மீது CBI, அமலாக்கத்துறை போன்றவை குற்றம் சாட்டியுள்ளன. அந்தத் தொகை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில், இந்தியப் புலனாய்வு நிறுவனங்களால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட மைக்கேலை விசாரணைக்காக அனுப்பி வைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, அவரை அனுப்பிவைக்க துபாய் நீதிமன்றம் அனுமதியளித்தது.

அபுதாபி வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜயீத்துடன் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மைக்கேல் துபாய் விமான நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11.35 மணியளவில் வளைகுடா பகுதி ஜெட் விமானத்தில் வந்தபோது சிபிஐ அவரை காவலில் வைத்தது. ஜேம்ஸ், 57, சில CBI, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு விங் (RAW) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இணைந்து. குடியேற்ற நடைமுறைக்கு பின்னர், அவர் தெற்கு தில்லி லோதி ரோடு பகுதியில் உள்ள CBI தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், CBI தலைமை அலுவலகத்தில் மைக்கேலிடம் விடிய விடிய 12 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். 

 

Trending News