ஏர் மார்ஷல் VR.சவுத்ரி இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக நியமனம்

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா செப்டம்பர், 30ம் தேதி  ஓய்வு பெறும் நிலையில், ஏர் மார்ஷல் VR சவுத்ரி பொறுப்பேற்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2021, 11:07 PM IST
  • ஏர் மார்ஷல் VR. சவுத்ரி அடுத்த விமானப்படைத் தலைவராக நியமிக்கப்படுவார்.
  • அவர் தற்போது விமானப் படையின் துணைத் தலைவராக உள்ளார்.
  • சவுத்ரி 1982 இல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார்
ஏர் மார்ஷல் VR.சவுத்ரி இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக நியமனம் title=

புது தில்லி: தற்போது விமானப்படை துணைத் தலைவராக, உள்ள ஏர் மார்ஷல் விஆர்.சவுத்ரி, அடுத்த விமானப் படைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21, 2021) தெரிவித்துள்ளது.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா செப்டம்பர் 30, 2021 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி பொறுப்பேற்கிறார்.

Air Marshal V R Chaudhari appointed next Chief of Air Staff

 

ஏர் மார்ஷல் வி ஆர் சவுத்ரி அடுத்த விமானப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி டிசம்பர் 29, 1982 அன்று இந்திய விமானப்படையில் சேர்ந்தார். அதன் பின்னர், அவர் தற்போது விமானப்படை துணைத் தலைவராக உள்ள நிலையில் விமானப் படையில் பல பொறுப்புகளை வகித்துள்ளதோடு, விருதுகளும் பெற்றுள்ளார்

பரம் விசிஷ்ட சேவா பதக்கம் (PVSM), அதி விஷிஷ்ட சேவா பதக்கம் (AVSM) மற்றும் வாயு சேனா பதக்கம் (VM) ஆகிய விருதுகளை ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி பெற்றுள்ளார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ | காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி: இணையம், மொபைல் சேவை துண்டிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News