பிரயாக்ராஜ்: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது. "ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ASI ஆய்வை தொடங்கும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று ஞானவாபி சர்வே வழக்கில் இந்து தரப்பில் ஆஜரான விஷ்ணு சங்கர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறினார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் துறை (ASI) ஆய்வு செய்ததை எதிர்த்து, அஞ்சுமான் இன்டெஜாமியா மசூதி கமிட்டி ( Anjuman Intezamia Masjid Committee) தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாரணாசி மாவட்ட நீதிபதியின் ஜூலை 21ஆம் தேதி உத்தரவை எதிர்த்து அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. ஜூலை 21 அன்று, வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா, மே 16, 2023 அன்று நான்கு இந்துப் பெண்கள் அளித்த மனுவின் பேரில் ஞானவாபி வளாகத்தில் அகழ்வாய்வு நடத்த உத்தரவிட்டார். இருப்பினும், மாவட்ட நீதிபதியின் உத்தரவு, வசுகானா என்னும் குளம் பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி இல்லை . உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குளம் உள்ள வளாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மசூதி கோயிலின் மீது கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய ASI விரிவான அறிவியல் ஆய்வை மேற்கொண்டு வந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வை தொடங்க வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறையை (ASI) கேட்டுக் கொண்டது, இது தொடர்பான விசாரணை ஜூலை 26 மாலை 5 மணி வரை உச்சநீதிமன்றம் நிறுத்திவைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய ஆய்வை நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம்m வழங்கிய உத்தரவுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் விசாரித்தது. ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்பு தனது உத்தரவை திருத்தம் செய்தது. அதன் மூலம் ஜூலை 24 அன்று, மசூதிக்குள் வழிபாட்டு உரிமை கோரி விசாரணை நீதிமன்றத்தில் இந்துக்கள் தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் குழுவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் கோவில் - ஞானவாபி மசூதி: கி.பி.1100 முதல் 2022 வரையிலான வரலாறு
ASI ஆய்வை நிறுத்தி வைப்பதன் மூலம் இடைக்கால மனு மீதான நிவாரணம் வழங்கும் போது, உயர் நீதிமன்றம் ஜூலை 24 அன்று முக்கிய வழக்கை விசாரித்து உத்தரவு வழங்கியது. ASI பணிக்கு தடை கோரி நிலுவையில் உள்ள மனுவில் மசூதி குழு இடைக்கால மனுவுடன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்ட நிலையில், இந்து கோயில் ஒன்றை இடித்து விட்டுத் தான் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதற்கான சான்றுகளை வழங்கி இந்து தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் உள்ள சிருங்கார கௌரியை தரிசனம் செய்யவும் பூஜிக்கவும் அனுமதி வேண்டும் என நான்கு பெண்களின் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூலை 21ஆம் தேதி ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும் படிக்க | ஞானவாபி வழக்கில் அதிரடி தீர்ப்பு: வழக்கு கடந்து வந்த பாதை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ