யமுனா விரைவு சாலையில் ஆம்புலன்ஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
மதுரா: செவ்வாய்கிழமை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினரின் இறந்தவரின் உடலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் எடுத்து சென்றுகொண்டிருந்த்னார். அப்போது, அந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, அம்புலன்ஸ் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதையடுத்து, அந்த அம்புலன்ஸ் எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் போலீசார் மற்றும் எக்ஸ்பிரஸ்வே அதிகாரிகள் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்தனர்.
இந்த சம்பவம், தாணா பால்தேவ் வீதியில் மைல்ஸ்டோன் 138-க்கு அருகில் விபத்து நடந்தது. ஆம்புலன்ஸ் டெல்லியிலிருந்து பீகாருக்கு செல்கிறது. இந்த சம்பவத்தில் சம்பவைடத்திலேயே சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஜம்மு மற்றும் காஷ்மீர் எண் தகட்டைப் பெற்றது.