பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.
இந்நிலையில், தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாதவ்பூரில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.