ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்ககளை எடுத்து வருகிறது. இருப்பினும், வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்குநாள் தொற்றின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆந்திரநில YSR காங்., கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார். ஆய்வு கூட்டத்தில் நோய் பரவலை தடுக்க பரிசோதனை மையங்களை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் நபர்களின் இறுதி சடங்கிற்கு அரசின் சார்பில் ரூ. 15 ஆயிரம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 365 ஆக உள்ளது. 31,103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 16,464 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 14,274 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
READ | See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்!
மேலும், மாநிலத்தில் COVID-19 நோயாளிகளைக் கையாள 17,000 மருத்துவர்கள் மற்றும் 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வரவிருக்கும் நாட்களில் தேவைப்படலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். கூட்டத்தில் துணை முதலமைச்சரும் மருத்துவ மற்றும் சுகாதார அமைச்சருமான அல்லா நானி, தலைமைச் செயலாளர் நீலம் சாவ்னி, டிஜிபி கௌதம் சவாங், மருத்துவ மற்றும் சுகாதார சிறப்பு தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவார் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம், தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) தலைவர் என்.சந்திரபாபு நாயுடு, ஒரு வீடியோவை ட்வீட் செய்திருந்தார், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஒரு ஜே.சி.பி. உதவியுடன் குழிக்குள் வீசப்படுவதைக் காட்டி, முதல்வரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.