மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
மேற்குவங்கத்தில் இலவச ரேஷன் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். தற்போது வழங்கப்படும் இலவச ரேஷன் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொன்டு 2021 ஜூன் வரை நீட்டிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் மேற்குவங்கம் ஆறாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.
READ | நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது: பிரதமர் மோடி
மேலும் இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 80 கோடி குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் திட்டத்தை நீட்டிப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை எல்லையில் சீன ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தனது முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார். மாநில செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி... சீன செயலிகளை தடை செய்தாள் மட்டும் போதாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
"சில செயலிகளைத் தடை செய்வது மட்டுமே முடிவுகளைத் தராது. சீனாவுக்கு பொருத்தமான பதிலை நாங்கள் வழங்க விரும்புகிறோம், அதை நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார். "இல்லையெனில் இந்த நாட்டின் மக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தக்கூடும்" என்று வங்காள முதல்வர் மையத்திலிருந்து "ஆக்கிரோஷமான பதிலை" கோரியுள்ளார்.