ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பனிக்குள் புதைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மை நாட்களாக, கடுமையானப் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், லடாக் மலைத்தொடரில், பெரியளவில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டது.
இந்நிலையில் பனிப்பொழிவு அதிக அளவில் உள்ள நிலையில் இன்று காலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கின் கார்துங் லா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் புதைந்துள்ளனர். பனிச்சரிவில் புதைந்த 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Jammu & Kashmir: 10 people trapped under snow after an avalanche occurred in Khardung La, Ladakh. Search operation underway. More details awaited. pic.twitter.com/etWuxJLo1f
— ANI (@ANI) January 18, 2019