தீபாவளிக்கு முன் பெண்களுக்கு பெரிய பரிசை வழங்க உத்தரப்பிரதேச மாநில யோகி அரசு தயாராகிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளியன்று, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 1.85 கோடி பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க்குவது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துளார். மேலும், தீபாவளிக்கு முன்னதாக அனைத்து பயனாளிகளும் இத்திட்டத்தின் பலனைப் பெறும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு
உத்தரப்ப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தீபாவளியை முன்னிட்டு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் குறித்த நேரத்தில் முடிக்கப்பட வேண்டும். தீபாவளிக்கு முன்னதாக அனைத்து பயனாளிகளின் வீடுகளிலும் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு 85 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டது
இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தீபாவளியன்று 1.85 கோடி பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை உ.பி அரசு வழங்குகிறது என்றால், கடந்த ஆண்டு 85 லட்சம் பெண்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தீபாவளி தவிர, ஹோலி பண்டிகைக்கும் ஒரு எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மாநில அரசுகள் மானியம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், எல்பிஜி சிலிண்டருக்கு மத்திய அரசு 300 ரூபாய் மானியம் வழங்குகிறது, மீதமுள்ள பணத்தை மாநில அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் பணம் கொடுத்து எல்பிஜி சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மானியத் தொகை அவர்களின் கணக்கிற்கு அனுப்பப்படும். இந்தத் திட்டத்தின் பயனைப் பெற, வங்கிக் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறாது என எல்பிஜி சிலிண்டர் விநியோக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தொழிலாளர் துறை அதிகாரிகளும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழ்நாட்டு மக்களுக்கு பண்டிகை காலத்தில் தொந்தரவாக இருக்கும்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ