Indian Independence and Tricolor Flag: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. ஆனால், இந்திய சுதந்திரத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு, பிகாஜி காமா என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை ஜெர்மனியில் முதல் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த நேரத்தில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தில் சேர பயந்த அனைத்து பெண்களுக்கும் ஒரு ஊந்துசக்தியாக உருவெடுத்தார் மேடம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பிகாஜி காமா படேல். ஜெர்மனியில் முதன்முறையாக இந்தியக் கொடியை ஏற்றிய மாபெரும் சுதந்திரப் போராளி பிகாஜி படேல் காமா பிகாஜி காமா அவர்களின் பெயர், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 1907 அன்று, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் சர்வதேச சோசலிச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஐரோப்பா, அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா உட்பட பல நாடுகள் பங்கேற்றன. அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட, 46 வயதான பிகாஜி காமா, இந்திய தேசியக் கொடி இந்தியக் கொடியின் முதல் வடிவமைப்பு பதிப்பின் முதல் பதிப்பை வெளியிட்டார்.
இந்தியாவின் தேசியக் கொடியை முதன்முறையாக ஏற்றிய கொடியை தொகுத்து வழங்கிய பிகாஜி படேல் காமா என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். சுதந்திரத்திற்கு முன்னரே மூவர்ணக் கொடி ஏன் ஏற்றப்பட்டது? என்ற கேள்விகளுக்கு, சுதந்திர போராட்ட வரலாறு பதில் சொல்கிறது.
மேலும் படிக்க | ப்ரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்கள் - பிரதமரின் வேண்டுகோள்
முதல் முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பெண் பிகாஜி காமா, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்திய திருநாட்டில் முடிவுக்கு கொண்டுவர விரும்பினார். அதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது.
எனவே, இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்ற கருத்தாக்கத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்பினார், அதற்கு அவர் எடுத்த முயற்சிகளில் ஒன்று இந்திய மூவர்ணக் கொடியை வடிவமைத்தது. அதில் அவர் பெரிய அளவில் வெற்றி பெற்றார்.
மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, இது சுதந்திர இந்தியாவின் கொடி என்று கூறினார். அதோடு, அந்த மாநாட்டில் இருந்த அனைவரையும் எழுந்து நின்று கொடி வணக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் தேவை என்ற எண்ணத்தை சர்வதேச அளவில் ஆழப் பதிக்க வைத்தவர் மேட்ம் பிகாஜி காமா படேல்.
மேலும் படிக்க | அனைவரும் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்
மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ