நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனினும், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் குறைவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அதிலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகம் காணப்படுகின்றனர்.
எனவே,ஆபாச இணைய தளங்களை தடை செய்யக்கோரி, மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது....!
காஷ்மீர்,, மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், உட்பட பல இடங்களில், சிறுமியர் பலாத்காரம் செய்யப்படுவது அதிரித்துள்ளது.
ஆபாச இணைய தளங்கள் ஏராளமாக புழக்கத்தில் இருப்பது, இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, ஆபாச இணையதளங்கள், மற்றும் சினிமாக்களை தடை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.