உடனே ரூ.1,700 கோடி செலுத்துங்க... காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்!

Income Tax Notice to Congress Party: வருமான வரி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2024, 02:54 PM IST
  • வருமான வரி நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி.
  • இது ஒரு வகையான "வரி பயங்கரவாதம்" என விமர்சனம் செய்த ஜெய்ராம் ரமேஷ்.
  • காங்கிரஸின் மனுக்களை நிராகரித்த நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.
உடனே ரூ.1,700 கோடி செலுத்துங்க... காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்! title=

மக்களவை பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு பின்னடைவாக,  வருமான வரித்துறை அகட்சிக்கு சுமார் 1700 கோடி ரூபாயை வரி மற்றும் அபராதமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் 2017-18 முதல் 2020-21 வரையிலான வருமான வரி மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வரியுடன் தொடர்புடையது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்,  உத்தரவு வந்துள்ளதை அடுத்தும், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ்  கடுமையாக விமர்சித்துள்ளது.

இது ஒரு வகையான "வரி பயங்கரவாதம்: ஜெய்ராம் ரமேஷ்

வருமான வரி நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, எதிர் கட்சிகளை ஒடுக்க, பாஜக நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் யுக்திகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது, குறிப்பாக மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது ஒரு வகையான "வரி பயங்கரவாதம்" எனவும், அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வருமான வரித் துறையின் மறுமதிப்பீட்டு நடவடிக்கை

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், 2017-18 முதல் 2020-21 வரையிலான வருமான வரித் துறையின் மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முந்தைய ஆண்டுகளுக்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸின் இதேபோன்ற மனுக்களை நிராகரித்த நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.

 

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு

மேலும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.105 கோடிக்கு மேல் வரி வசூல் செய்வதற்கான வருமான வரித்துறை நோட்டீஸை நிறுத்தி வைக்க கூடாது என்ற வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு உறுதி செய்தது. இருப்பினும், தங்கள் குறைகளை மீண்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக காங்கிரஸ் மனு தாக்கல் செய்யலாம என நீதிமன்றம் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி, அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் செயல்முறைக்கு தடை கோரியது.

மேலும் படிக்க | Annamalai Nomination : அண்ணாமலை வேட்புமனுவில் குளறுபடி உண்மையா?

கட்சியின் கணக்குகளை முடக்கிய வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம், ரூ.200 கோடி அபராதம் விதித்து இருந்தது. காங்கிரஸ் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற கூறிய வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்,  கட்சியின் கணக்குகளை முடக்கியது. இந்தச் சூழலில் தான் இப்போது ரூ.1700 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ’மோடி மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்’ தாராபுரத்தில் கனிமொழி சொன்ன அந்த பாயிண்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News