புது டெல்லி: ஆளும் என்டிஏ கூட்டணி (BJP-JDU alliance) மெகா அலையன்சை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆர்ஜேடி-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியமைப்பதாக தெரிவித்திருந்தது. அதேபோல பாஜக கூட்டணிக்கு சற்று பின்னடைவு இருக்கும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பு எல்லாம் பொய் என என நிரூபிக்கப்பட்டதால், "மோடி மந்திரம்" "மோடி அலை" (Modi Magic) இன்னும் நாட்டில் நிலவுகிறது என்று பாஜக மத்திய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கூட்டணி (BJP-led NDA alliance) வலுவான பெரும்பான்மையை நோக்கி செல்கிறது. 243 இடங்களைக் கொண்ட சட்டசபையில் 112 என்ற பாதியைக் கடந்து முன்னிலை வகிக்கிறது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் காணமுடிகிறது. ஆனால் அதில் ஒரு ஆச்சரியமும் இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எண்ணிக்கையின்படி, பாஜக, ஜேடியு தலைமையிலான என்டிஏ 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பீகாரில் பாஜக இதுவரை சிறப்பான இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 53 இடங்களை வென்றது. இந்த முறை 74 இடங்களில் பிஜேபி முன்னிலை வகிக்கிறது. ஜேடியு 48 இடங்களிலும், விஐபி 8 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியைப் (Mahagathbandhan) பற்றி பேசினால், ஆர்ஜேடி 60 மற்றும் காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, இந்த முறை தேர்தல் போட்டியில் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவாகி வருகிறது என்பது இந்த போக்குகளிலிருந்து தெளிவாகிறது.
ALSO READ | பிறந்தநாள் பரிசாக தேஜஸ்விக்கு மக்கள் முதல்வர் பதவியை அளிப்பார்கள்: RJD நம்பிக்கை
இப்போது பாஜக அதிக பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது, நிதீஷ் குமார் (Nitish Kumar) மீண்டும் முதல்வராக அமருவாரா? அரசியல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தேர்தலுக்கு முன்னரே, பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், முதல்வராக நிதீஷ்குமார் மட்டுமே இருப்பார் என்று பாஜக கூறியிருந்தது. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், ஜே.டி.யுவை விட பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. எனவே, பாஜக கட்சிக்குள் முதலமைச்சரின் நாற்காலி பெற வேண்டும் என்ற கோரிக்கை எழக்கூடும்.
ஜே.டி.யு தலைமையும் இதை புரிந்துகொள்கிறது. எனவே, ஆளும் முகாமுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ள போதிலும், செய்தித் தொடர்பாளர்களைத் தவிர இரு தரப்பினரிடமிருந்தும் வேறயாரிடமும் இருந்து எந்தவொரு அறிக்கை வரவில்லை. பாஜக எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் பதவிக்கான கோரிக்கையை எழுப்பினால், கட்சி உயர் மட்டக்குழு அவர்களுது கோரிக்கையை புறக்கணிப்பது அவ்வளவு எளிதல்ல.
ALSO READ | Maha Exit Poll: அதிகரிக்கும் சஸ்பெனஸ்! தேஜஸ்விக்கு அமோக ஆதரவு! நிதிஷ்குமாருக்கு அம்போ!
இதன் மூலம், பாஜகவுடன் ஒப்பிடும்போது அவர்களை விட ஜே.டி.யு குறைவான இடங்களை பெரும் என்பதால், நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் ஆவது சுலபமல்ல என்பதால், இப்போது அனைவரது கண்களும் அவரின் மேல் உள்ளன. இருப்பினும், "கடந்த தேர்தலின்" முதல்வர் நாற்காலி பந்தயத்தில் நிதீஷ் குமார் ஏற்கனவே விளையாடியுள்ளார் என்பதும் உண்மை.
பாஜக மற்றும் ஜேடியு ஆகிய இரண்டும் கட்சிகளும் ஏறக்குறைய சம இடங்களில் போட்டியிட்டன. அதாவது 122 இடங்களில் ஜே.டி.யு, 121 இடங்களில் பாஜக. ஆனால் பாஜக தங்கள் இடங்களில் இருந்து விஐபி (VIP) கட்சிக்கு 11 இடங்களை வழங்கியது. தற்போது விஐபியும் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.