KGF சுரங்கத்தைவிட பலமடங்கு அதிக தங்கம் இருப்பது பீகாரில்: தேட அரசு முடிவு

பீகார் மாநிலத்தில் தங்க வேட்டை... ஜமுய் நகரில் 22.28 மில்லியன் டன் தங்கம் இருக்கிறது! இது KGF சுரங்கத்தைவிட பலமடங்கு அதிகம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2022, 07:40 AM IST
  • பீகாரில் தொடங்கும் தங்கத் தேடல்
  • தேடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியது
  • கேஜிஎஃப் சுரங்கத்தை விட அதிக தங்க இருப்பு கொண்ட பீகார்
KGF சுரங்கத்தைவிட பலமடங்கு அதிக தங்கம் இருப்பது பீகாரில்: தேட அரசு முடிவு title=

நாட்டிலேயே அதிக தங்க இருப்பு பீகாரில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி, ஜமுய் மாவட்டத்தில் சுமார் 22.28 மில்லியன் டன் தங்க இருப்பு உள்ளது, இதில் 37.6 டன் கனிம வளம் நிறைந்த தாது உள்ளது. அதைத் தேட அனுமதிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
  
சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படத்தில் கோலார் தங்க வயல்களில் தங்கச் சுரங்கம் காட்டப்பட்டதை பார்த்திருப்க்கலாம். ந்தச் சுரங்கங்களில் இருந்து 121 ஆண்டுகளில் 900 டன் தங்கம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தங்கம் பிரித்தெடுக்க அதிக செலவு ஏற்பட்டதால் மூடப்பட்டது. 

கேஜிஎஃப்-ல் இருந்து 900 டன் தங்கம் எடுக்கப்பட்ட நிலையில், ஜமுய் நகரில் 22.28 மில்லியன் டன் தங்கம் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புனேயில் BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி

தேடுதலில் ஈடுபடுவது தொடர்பாக ஏஜென்சிகளுடன் பேச்சு வார்த்தை 
கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் ஹர்ஜோத் கவுர் பம்ஹ்ரா கூறுகையில், "ஜமுய் நகரில் உள்ள தங்கப் படிவுகளை ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்ஐ மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. ஜமுய் மாவட்டத்தில் உள்ள கர்மாதியா, ஜாஜா மற்றும் சோனோ போன்ற பகுதிகளில் தங்கம் இருப்பதை ஜிஎஸ்ஐயின் கண்டுபிடிப்புகள் வெளிகொணர்ந்தன" என்று அவர் கூறினார்.

மாநில அரசு ஒரு மாதத்திற்குள் ஜி-3 (முதற்கட்ட) ஆய்வுக்கான மத்திய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக பம்ஹ்ரா கூறினார். சில பகுதிகளில் ஜி2 (பொது) வகை ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம் என்றார்.

மேலும் படிக்க | இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது DGCA

மத்திய அமைச்சரின் கருத்து
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பிகாரின் தங்க கனிமங்கள் இருப்பது தொடர்பாக கடந்த ஆண்டு மக்களவையில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் தங்க இருப்பில் பீகாரில்தான் அதிக அளவு தங்கம் இருக்கிறது. ஜோஷி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பீகாரில் (222.8 மில்லியன் டன் தங்கம் பூமியில் இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த தங்கத்தில் 44 சதவீதம் என்றும் கூறியிருந்தார்.

"தேசிய கனிம இருப்புக் கணக்கின்படி, ஏப்ரல் 1, 2015 நிலவரப்படி, 654.74 டன் தங்க உலோகத்துடன் நாட்டிலுள்ள தங்கத் தாதுவின் மொத்த வளம் 501.8 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதில் பீகாரில் 222.8 மில்லியன் உள்ளது. டன்கள் (44 சதவீதம்) 37.6 டன் உலோகம் கொண்ட தாது என்பது குறிப்பிடத்தக்கது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | தென்னிந்திய கலைஞர்களை இந்தி திரையுலகம் மதிக்காது - நடிகர் சிரஞ்சீவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News