5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து... கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி!

Bizarre News: 5 ரூபாய் மதிப்பிலான குர்குர்ரே பாக்கெட்டை வாங்கி தராததால் தனது கணவனிடம் விவாகரத்து கேட்டு மனைவி புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2024, 06:30 PM IST
  • இருவருக்கும் கடந்தாண்டு திருமணமாகி உள்ளது.
  • அந்த பெண்ணுக்கு தினமும் குர்குர்ரே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இது அந்த கணவனுக்கு பிரச்னையாக இருந்துள்ளது.
5 ரூபாய் குர்குர்ரே வாங்கித் தராததால் விவாகரத்து... கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி! title=

Bizarre News: ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது சங்க காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம் வரை இருக்கக் கூடிய முக்கிய பிரச்னையாக உள்ளது. சமீபத்தில் தனியார்  தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், குறிப்பால் பேசும் மனைவிகள் - அதனை புரிந்துகொள்ள கஷ்டப்படும் கணவன்கள் என ரீதியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது இந்த நவீன காலத்தில் ஆண் - பெண் உறவில் அதுவும் திருமண உறவில் எந்தளவிற்கு ஆழமான பிரச்னைகள் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது. 

குறிப்பாக, அதில் பேசிய ஒரு மனைவி, தனது கணவன் தன்னுடன் படுத்து தூங்கி சுமார் 8 மாதங்கள் இருக்கும் என்றும் அவர் இரவு முழுவதும் கண் முழித்து நண்பர்களுடன் வீடியோ கேம் விளையாடுகிறார் என்றும் கூறியிருந்தார். அவர் இதை கூறும்போது தொண்டை அடைத்து பேசினார். ஆனால் அந்த கணவனுக்கோ அதுகுறித்த புரிதல் இல்லை. இதுமட்டுமில்லை பெண்கள் நிறைய பேர் தங்களுக்கு கணவன்மார் மீதுள்ள எதிர்பார்ப்புகளை கூறும்போது, கணவன்கள் வரிசையில் அத்தனை பேரும் பதற்றமடைவதை பார்க்க முடிந்தது. 

அதேபோல், இந்த காலகட்டத்தில் விவாகரத்தும் அதிகரித்து வருகிறது. குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அந்த அமைப்பில் இருக்கும் ஆண் - பெண் இருவருமே ஆரோக்கியமான முறையில் ஏற்றுக்கொள்ளாததும் விவாகரத்து அதிகரிக்க முக்கிய காரணமாகும்.  

மேலும் படிக்க |அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்கா

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஒரு வினோதமான காரணத்திற்கு தனது கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. ஆம், 5 ரூபாய் மதிப்புள்ள குர்குர்ரே எனப்படும் நொறுக்குத் தீனியை சாப்பிடுவதற்கு வாங்கித் தராத காரணத்தால் கணவனிடம் இருந்து அவரின் மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அந்த பெண்ணுக்கு தினமும் குர்குர்ரே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இந்த நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் அவரின் குடும்பத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தினமும் கணவன் - மனைவி இடையே சண்டையும் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில், ஒருநாள் அந்த பெண் கேட்டபடி குர்குர்ரே பாக்கெட்டை அந்த கணவன் வாங்கி செல்லவில்லை என கூறப்படுகிறது. இது அந்த பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சாப்பிட குர்குர்ரே வாங்கி வராத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மேலும், சில நாள்கள் கழித்து தனக்கு தனது கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும என போலீசாரிடம் முறையிட்டுள்ளார். 

இந்த ஜோடிக்கு கடந்தாண்டு தான் திருமணமாகி உள்ளது. திருமணமான புதிதில் இருவருக்கும் எவ்வித பிரச்னையும் இன்றி வாழ்க்கை சுமுகமாகவே சென்றுள்ளது. இருப்பினும், மனைவிக்கு உள்ள அதிகம் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் கணவனுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவை அனைத்தும் அந்த கணவன் தரப்பில் இருந்து கூறப்பட்டதே ஆகும். அந்த மனைவி விவாகரத்து குறித்து பேசியபோது, தனது கணவன் தன்னை அடித்ததால் தான் அவர் வீட்டில் இருந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்ததாகவும், விவாகரத்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க |பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News