மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் சட்டமன்றம் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டது. அனைத்து பாஜக எம்.எல்.ஏக்களும் காவி நிற தொப்பியை அணிந்திருந்தனர். அதில் "நானும் சாவர்க்கர் தான்" என்று எழுதப்பட்டிருந்தது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸும் இந்த தொப்பியை அணிந்திருந்தார். மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் காந்தியிடம் "நிபந்தனையற்ற மன்னிப்பு" கேட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
மகாராஷ்டிரா சட்டசபையின் முதல் நாள் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்களன்று பெரும் விவாதத்துடன் தொடங்கியது, பாஜக எம்எல்ஏக்கள் ’Mi Pan Savarkar’ (நானும் சாவர்க்கர்) என்ற செய்தியுடன் காவி நிற தொப்பிகளை அணிந்து சபைக்குள் நுழைந்தபோது, "நானும் சாவர்க்கர் தான்" என்ற கோசத்துடன் சென்றனர்.
சட்டமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்பு, மகாராஷ்டிராவின் அனைத்து பாஜக எம்.எல்.ஏக்களும், சாவர்க்கர் என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்து ஒரே இடத்தில் கூடியிருந்தனர். அதாவது குளிர்காலக் கூட்டத்தொடரின் போது சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்ப பாஜக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த காங்கிரஸ் பேரணியின் போது ராகுல் காந்தி, "மன்னிப்பு கேட்க தான் ஒன்றும் வீர சாவர்க்கர் அல்ல" ராகுல் காந்தி" என்றும், உண்மையை பேசியதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாகவே மகாராஷ்டிராவின் பாஜக எம்.எல்.ஏக்கள் சாவர்க்கர் என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்து ராகுலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் பேச்சால் சிவசேனாவும் வேதனை அடைந்துள்ளது. ஆனால் கூட்டணி தர்மம் காரணமாக, அக்கட்சியால் இதுகுறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், சாவர்க்கர் பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவதன் மூலம் சிவசேனாவை சீண்டலாம் என பாஜக முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்பு, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் "இந்துத்துவா" கருத்தியலாளர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் “நானும் சாவர்க்கர்” என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.