ராகுல் காந்தி-யை கிண்டல் செய்து Video வெளியிட்ட பாஜக!

சமீபகாலமாக நாட்டின் பிரதான கட்சிகலான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இணைய போர் நடந்து வருகிறது!

Last Updated : Apr 25, 2018, 08:34 AM IST
ராகுல் காந்தி-யை கிண்டல் செய்து Video வெளியிட்ட பாஜக! title=

சமீபகாலமாக நாட்டின் பிரதான கட்சிகலான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இணைய போர் நடந்து வருகிறது!

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. அப்போது கட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜக-வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியின் சாதனைகள் என ஆட்சியை கிண்டல் செய்யும் வகையில் வீடயோவினை உருவாக்கி காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

அதேப்போல் தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 'மேடைப் பேச்சு தடுமாறல்' நிகழ்வுகளின் தொகுப்பினை வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Trending News